Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அம்பத்துாரில் சாலை விபத்து நிவாரண நிதி குறித்து கலந்துரையாடல் கூட்டம்!

07:08 PM Oct 31, 2023 IST | Student Reporter
Advertisement
ஆவடி காவல் ஆணையராகத்துக்குட்பட்ட பகுதிகளில் விபத்தில் சிக்கி காயமடைந்தவர்கள்,  இறந்தவர்களுக்கு சாலை விபத்து நிவாரண நிதி பெறுவது குறித்து அம்பத்துாரில் இன்று கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

சென்னை அம்பத்துாரில் இன்று முதலமைச்சரின் சாலை விபத்து நிவாரணம் நிதி குறித்து கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டம் ஆவடி காவல் போக்குவரத்து துணை ஆணையர் ஜெயலட்சுமி தலைமையில் நடைபெற்றது.  இதில் விபத்தில் சிக்கியவர்கள், இறந்தவர்களின் குடும்பத்தார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.  பின்னர் வருவாய் துறையினர், மருத்துவ துறையினர், போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கலந்துகொண்டு நிவாரணம் கிடைப்பதற்கு தேவையான இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ் அனைத்து சான்றிதழ்களையும் வழங்குவதற்காக ஏற்பாடு செய்தனர்.

Advertisement

இதனால் நிவாரணம் கிடைக்காததவர்களுக்கு உடனடியாக கிடைக்க வழிவகை செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.  இதில் மேலும் ஆவடி காவல் ஆணையரகத்துக்குட்பட்ட செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு,  ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவிக்குட்பட்ட பகுதியில் விபத்தில் சிக்கி உடல் ஊனமுற்றவர்கள்,  இறந்தவர்களின் குடும்பத்தினர் தெளிவுபெறும் வகையில் இக்கூட்டம் நடைபெற்றது.

அனகா காளமேகன்

Tags :
அம்பத்துார்முதலமைச்சர்ஆவடி காவல் ஆணையராகத்துக்குட்பட்டகலந்துரையாடல் கூட்டம்காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள்சலை விபத்தில்சாலை விபத்து நிவாரண நிதி
Advertisement
Next Article