Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கிருஷ்ணகிரி அருகே புதிய கற்கால பொருட்கள் கண்டெடுப்பு - அமைச்சர் தங்கம் தென்னரசு!

11:40 AM Jun 29, 2024 IST | Web Editor
Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் புதிய கற்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement

இது குறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,

"கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் சென்னானூர் கிராமத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில் புதிய கற்கால கற்கருவி, சுடுமண்ணாலான முத்திரை, சங்கு வளையல் துண்டுகள், வட்ட சில்லுகள், கண்ணாடி வளையல் துண்டுகள் தக்களி போன்ற தொல்பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இன்று (28.06.2024) ஏ2 என்னும் அகழாய்வு குழியில் 75 செ.மீ ஆழத்தில் இரும்பிலான கலப்பையின் கொழுமுனை கிடைக்கப்பெற்றுள்ளது.

இக்கொழுமுனையின் எடை 1.292 கி.கி ஆகும். இதன் நீளம் 32 செ.மீ அகலம் 4.5 செ.மீ மற்றும் தடிமன் 3 செ.மீ கொண்டு காணப்படுகிறது. இக்கொழுமுனை பண்டைய காலத்தில் விவாசாயம் மேற்கொள்ள ஏர்கலப்பையில் கொழு முனையாக பயன்பட்டிருக்கலாம். இப்பொருள் கிடைத்த தொல்லியல் சூழலைக் கொண்டு இவற்றின் காலம் இடைக்கால வரலாற்றுக் காலமாக இருக்கலாம். முழுமையான ஆய்விற்கு பிறகு எக்காலத்தினை சார்ந்தது என்பதை துல்லியமாக அறிய இயலும்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags :
DMKKrishnagiritamil naduThangam thennarasu
Advertisement
Next Article