Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பேரிடர் நிதி - தமிழ்நாட்டுக்கு ரூ.522.34 கோடி ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்!

தமிழ்நாட்டுக்கு ரூ. 522.34 கோடி கூடுதல் பேரிடர் நிதி உதவி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
04:23 PM Apr 05, 2025 IST | Web Editor
Advertisement

கடந்த 2024 ஆம் ஆண்டில் இயற்கை பேரிடர்களால்  பாதிக்கப்பட்ட பீகார், இமாச்சலப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு மாநிலங்களுக்கு கூடுதல் உதவியை வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

Advertisement

அதன்படி, இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட பிகாருக்கு ரூ.588.73 கோடியும், ஹிமாசலப் பிரதேசத்திற்கு ரூ.136.22 கோடியும், தமிழ்நாட்டுக்கு ரூ.522.34 கோடியும், புதுச்சேரிக்கு ரூ.33.06 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு, கடந்த ஆண்டு இயற்கை பேரிடர்களைச் சந்தித்த பீகார், இமாச்சலப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுடன் தோளோடுதோள் நின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024-25 நிதியாண்டில், மத்திய அரசு SDRF இன் கீழ் 28 மாநிலங்களுக்கு ரூ.20,264.40 கோடியையும், NDRF இன் கீழ் ரூ.5,160.76 கோடியையும் 19 மாநிலங்களுக்கு விடுவித்தது. கூடுதலாக, 19 மாநிலங்களுக்கு மாநில பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து (SDMF) ரூ.4984.25 கோடியும், எட்டு மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து (NDMF) ரூ.719.72 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளன.

Tags :
amit shahCentral GovtDisaster FundRelief Fundtamil nadu
Advertisement
Next Article