இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார்!
இயக்குனர் வேலு பிரபாகரன் (68) உடல்நல குறைவால் காலமானார். வேலு பிரபாகரனுக்கு கடந்த மாதம் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில்,பத்து நாட்களாக கொட்டிவாக்கத்தில் உள்ள பிரமோத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந் நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 5.30 மணிக்கு காலமானார்.
வேலு பிரபாகரன் கடந்த1989ம் ஆண்டு வெளியான நாளைய மனிதன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து சத்யராஜ் நடித்த பிக்பாக்கெட், மோகன் நடித்த உருவம், பிரபுவின் உத்தமராசா உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பின்னர் புதிய ஆட்சி, அசுரன், கடவுள், புரட்சிக்காரன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
அதன் பின் காதல் கதை, ஒரு இயக்குனரின் காதல் டைரி என படங்களை இயக்கியவர் கஜானா, வெப்பன், ஜாங்க்கோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சென்னை வளசரவாக்கம் வீட்டில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது