Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“'TEENZ' திரைப்பட விவகாரத்தில் இயக்குநர் பார்த்திபன் தவறான குற்றச்சாட்டை சுமத்துகிறார்!” கிராபிக்ஸ் மேற்பார்வையாளர் புகார்!

03:57 PM Jul 06, 2024 IST | Web Editor
Advertisement

'TEENZ' படத்தின் விவகாரத்தில் இயக்குநர் பார்த்திபன் தவறான குற்றச்சாட்டை முன்வைப்பதாக கிராபிக்ஸ் மேற்பார்வையாளர் சிவபிரசாத் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். 

Advertisement

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ரியல் வொர்க்ஸ் என்ற நிறுவனத்தைச்
சேர்ந்த சிவபிரசாத் என்பவர் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் இயக்கி வரும்
'TEENZ' என்ற திரைப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கான மேற்பார்வையாளராக
இருந்துள்ளார்.

இந்நிலையில் சிவபிரசாத் கிராபிக்ஸ் பணிக்காக 80 லட்சம் கேட்டிருந்த நிலையில் பார்த்திபன் 37 லட்சம் செலுத்தியுள்ளார். திரைப்படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் பிப்ரவரி மாதத்திற்குள் முடித்துக் கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் குறித்த நேரத்தில் பணிகளை முடிக்காத நிலையில் பார்த்திபன் ஏப்ரல் 19ஆம் தேதி வரை கால நீட்டிப்பு கொடுத்துள்ளார். , சிவபிரசாத் திரைப்படத்தின் முக்கிய கிராபிக்ஸ் காட்சிகளை ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்க முடியாது என கூறியிருக்கிறார். இதனிடையே சிவபிரசாத் கடந்த மாதம் 4 தேதி ரூ.88,38,120  தொகை செலுத்த வேண்டும் என பார்த்திபனுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

இதையும் படியுங்கள் : இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு! -வானிலை மையம் தகவல்... 

ஒப்பந்தத்தை மீறி கூடுதலாக பணம் கேட்டது குறிப்பிட்ட தேதியில் பணிகளை முடித்துக் கொடுக்காதது தெரியவந்துள்ளது. இந்த சூழலில் தன்னை ஏமாற்றியதாக பார்த்திபன் கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் நம்பிக்கை மோசடி (406), ஏமாற்றுதல் (420) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த புகார் மனு தொடர்பாக தன் மீது தவறான குற்றச்சாட்டை பார்த்திபன் சுமத்தியுள்ளதாக கூறி கோவை மாநகர காவல் ஆணையரிடம் சிவபிரசாத் புகார் மனு அளித்தார்.

இது தொடர்பாக சிவபிரசாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

"உழைத்ததிற்க்கு தான் நாங்கள் பணம் கேட்கிறோம். கடன் வாங்கிதான் பல வேலைகளை செய்துள்ளோம்.அதற்கு உண்டான பணத்தைதான் கேட்கிறோம். 12 தேதி திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. அதற்கு முன் பணம் கொடுக்காமல் நாங்கள் எப்படி VFX எடிட்டிங் பணிகளை ஒப்படைப்பது"

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
CoimbatorecomplaintdirectorFilmgraphics supervisorgraphics workParthibanpolice station
Advertisement
Next Article