Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அமிதாப்பச்சன் #Rajinikanth குறித்து குட்டி ஸ்டோரி சொன்ன இயக்குநர் ஞானவேல்!

07:20 AM Oct 09, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் பற்றி சுவாரசிய தகவலை வேட்டையன் பட இயக்குநர் நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்.

Advertisement

த.செ.ஞானவேல் இயக்கிய 'வேட்டையன்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்க, எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் டீசர் மற்றும் டிரைலர் ஆகியவை வெளியாகிக் கவனம் ஈர்த்துள்ளன.

இந்த திரைப்படம் போலீஸ் என்கவுண்ட்டர்கள் மற்றும் கல்வித்துறை மாஃபியா ஆகியவற்றை பற்றி பேசும் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். 2மணி நேரம் 47 நிமிடம் கொண்ட திரைப்படமாக 'வேட்டையன்' உருவாகியுள்ளது. இந்த படம் திரையரங்குகளில் நாளை (அக்-10ம் தேதி) வெளியாவதால் படத்தின் ரிலீஸ் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்துக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது.

இதையும் படியுங்கள் : WomensT20WorldCup | இந்தியா- இலங்கை இன்று மோதல்!

இதனிடையே, சமீபத்தில் தெலுங்கில் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் 'வேட்டையன்' படக்குழுவினர் கலந்துக்கொண்டனர். அப்போது பேசிய இயக்குநர் ஞானவேல் பேசியதாவது :

"அமிதாப் பச்சன் சார் முதல்வரிசையில் உட்காரும் மாணவன் போல அடுத்த நாளைக்கான ஸ்கிரிப்ட் பேப்பரை கேட்டு தொல்லை செய்வார். என்னை மட்டுமல்ல எல்லா இயக்குநர்களிடமும் அப்படித்தான் செய்கிறரென அவரது உதவியாளரும் கூறினார். ஆனால். ஒருமுறை ஸ்கிரிப்ட் பேப்பரை வாங்கிவிட்டால் எந்தக் காட்சியை வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் எடுக்கலாம். அத்தனையும் மனப்பாடம் செய்துவிடுவார். ஆனால், ரஜினிகாந்த சார் கடைசி பென்ச் மாணவன் போலிருப்பார். ஸ்கிரிப்ட் பேப்பரைக் கொடுத்தாலும் படப்பிடிப்பில் பார்த்துக்கொள்ளலாம் என்பார். ஜாலியான மனிதர் ரஜினிசார்"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
Amitabh BachchanDirector GnanavelNews7Tamilnews7TamilUpdatesRajinikanth
Advertisement
Next Article