Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#IndianCoastGuard தலைமை இயக்குனர் ராகேஷ் பால் உடல்நலக் குறைவால் உயிரிழப்பு!

09:39 PM Aug 18, 2024 IST | Web Editor
Advertisement

இந்தியக் கடலோர காவல்படை தலைமை இயக்குனர் ராகேஷ் பால் நெஞ்சுவலி காரணமாக சென்னை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Advertisement

ராகேஷ் பால் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை 19 முதல் இந்தியக் கடலோர காவல்படை தலைமை இயக்குனர் பதவியில் இருந்தார்.  ராகேஷ் பால் 25 வது இந்திய கடலோர காவல் படை தலைமை இயக்குனர் ஆவார். இந்திய கடற்படை அகாடமியின் முன்னாள் மாணவரான அவர், ஜனவரி 1989ம் ஆண்டு இந்திய கடலோர காவல்படையில் சேர்ந்தார். கொச்சியில் உள்ள இந்திய கடற்படை பள்ளி துரோணாச்சார்யாவில் கன்னேரி மற்றும் ஆயுத அமைப்புகளில் தொழில்முறை நிபுணத்துவத்தையும், இங்கிலாந்தில் எலக்ட்ரோ-ஆப்டிக்ஸ் ஃபயர் கன்ட்ரோல் சொல்யூஷன் படிப்பையும் பெற்றுள்ளார்.

34 ஆண்டுகால அனுபவம் பெற்றுள்ள அவர், காந்திநகரின் கமாண்டர் கடலோர காவல்படை மண்டலம், துணை தலைமை இயக்குநர் மற்றும் டெல்லி கடலோர காவல்படை தலைமையகத்தில் கடலோர காவல்படை கூடுதல் தலைமை இயக்குநர் இது தவிர, டெல்லியில் உள்ள கடலோரக் காவல்படை தலைமையகத்தில் இயக்குநர்  மற்றும் முதன்மை இயக்குநர் போன்ற பல்வேறு மதிப்புமிக்க பணியாளர் பொறுப்புகளை வகித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : #KalaignarKarunanidhi மாநில உரிமைகளுக்கு போராடியவர் ; வேற்றுமையில் ஒற்றுமையை காத்தவர் - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

ஐசிஜிஎஸ் சமர்த், ஐசிஜிஎஸ் விஜித், ஐசிஜிஎஸ் சுசேதா கிருபளானி, ஐசிஜிஎஸ் அகல்யாபாய் மற்றும் ஐசிஜிஎஸ் சி -03 ஆகிய கப்பல்களில் தலைமை பொறுப்புகளையும் அவர் வகித்துள்ளார். இவரது சேவையை பாராட்டி கடந்த 2013-ம் ஆண்டு கடலோர காவல்படை பதக்கம் வழங்கப்பட்டது. முன்னதாக கடந்த 2018ம் ஆண்டு குடியரசுத் தலைவர் கடலோர காவல்படை பதக்கமும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 18ம் தேதி) இந்திய கடலோர காவல்படை கட்டளை மைய திறப்பு விழாவில் பங்கேற்க இருந்த நிலையில் நெஞ்சுவலி காரணமாக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனளிக்காமல் ராகேஷ் பால் இன்று உயிரிழந்தார். இதனைத்  தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  மற்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

Tags :
chest paindiedDirectorGeneralIndianCoastGuardRakeshPaul
Advertisement
Next Article