Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மாற்றுத் திறனாளிகளை என் படங்களில் காட்ட இதான் காரணம் - இயக்குநர் பாலா விளக்கம்

மாற்றுத் திறனாளிகளை தன் படங்களில் காட்சிபடுத்துவதற்கான காரணத்தை இயக்குநர் பாலா பகிர்ந்துள்ளார்.
10:07 PM Jan 19, 2025 IST | Web Editor
Advertisement

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் வணங்கான். இப்படத்தில் ரோஷினி பிரகாஷ் , மிஷ்கின் , சமுத்திரக்கனி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஆர் பி குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் கடந்த 10 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisement

இந்த நிலையில், படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினர். இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பாலா, அருண் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் பங்கேற்றனர். அப்போது இயக்குநர் பாலாவிடம் மாற்றுத் திறனாளிகளை உங்கள் படத்தில் அதிகம் காட்சிப்படுத்துவது ஏன்? என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த பாலா, “அவர்களின் உலகத்தைக் காண்பிக்க வேண்டும். சும்மா அவர்களைப் பார்த்துவிட்டு அய்யய்யோ ஏன் இப்படி இருக்கிறார்கள் என ஒதுங்கிப் போகக் கூடாது. நம்மிடையே தான் அவர்களும் வாழ்கிறார்கள். நம்மை நம்பிதான் இருக்கிறார்கள். அதனால் அவர்களைக் காண்பிக்க வேண்டியது நம்முடைய கடமை” என்று கூறினார்.

Tags :
cinemadirector balaphysically disabled personVanangaan
Advertisement
Next Article