இயக்குநர் அட்லீ பிறந்தநாள் - அல்லு அர்ஜுன் வாழ்த்து..!
கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் அட்லி குமார். 2014ல் ராஜராணி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய அட்லீ தெறி,மெர்சல் மற்றும் பிகில் என அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து அசத்தினார். தொடர்ந்து பாலிவுட்டில் முன்னணி நடிகரான ஷாருக்கனை வைத்து அட்லீ இயக்கிய வெளியான ஜவான் படம் 1000 கோடிக்கும் மேல் வசூலித்து சக்கை போடு போட்டது. இதன் மூலம் அட்லீ பான் இந்தியா இயக்குநாராக உருவெடுத்துள்ளார். அட்டுத்ததாக அல்லு அர்ஜுன் மற்றும் அட்லீ காம்போவில் புதிய படம் தயாராகி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் தீபிகா படுகோன் இணைந்துள்ளார்
இதனிடையே இயக்குநர் அட்லிக்கு இன்று தனது 39 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் அல்லு அர்ஜூன் அட்லிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
"என் அன்பான இயக்குனர் அட்லீக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் மீது வளம் பொழியட்டும். உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி, அன்பு மற்றும் செழிப்பு கிடைக்க வாழ்த்துகிறேன். நீங்கள் உருவாக்கும் சினிமா மாயாஜாலத்தை அனைவரும் அனுபவிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.