Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

யோகி பாபுவின் 'போட்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

10:24 AM Jul 09, 2024 IST | Web Editor
Advertisement

சிம்பு தேவன் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள ‘போட்’ திரைப்படம் ஆகஸ்ட் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ திரைப்படம் மூலம் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்தவர் சிம்புதேவன். அவரின் ‘இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்’ திரைப்படம் வரவேற்பை பெற்றது. கடைசியாக 2015-ம் ஆண்டு விஜய்யை வைத்து ‘புலி’ திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு சிம்பு தேவன் இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘போட்’(BOAT). இந்த திரைப்படத்தில் யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கவுரி கிஷன், எம்.எஸ்.பாஸ்கர், சின்னி ஜெயந்த் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். சுதந்திர போராட்ட காலக்கட்டத்தில் நடக்கும் இக்கதை உண்மை சம்பவத்தை தழுவி உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : தவறான சிகிச்சையால் 82 ஆடுகள் பலி – கால்நடை மருத்துவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

இந்நிலையில், இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
announcedAugustBoatDirectedFilmsimbu devanYogi Babu
Advertisement
Next Article