Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

4 மணி நேரத்தில் 39 செ.மீ. என கொட்டி தீர்த்த கனமழை.... தண்ணீரில் மிதந்த திண்டுக்கல்...

05:00 PM Jan 09, 2024 IST | Web Editor
Advertisement

திண்டுக்கல்லில் நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில்,  நகர்ப் பகுதி முழுவதும் வெள்ளத்தில் தத்தளித்தது. 

Advertisement

வானிலை ஆய்வு மையம் மழை பெய்யும் என அறிவித்திருந்த நிலையில்,  திண்டுக்கல்
மாவட்டத்தில் வேடசந்துர்,  ஆத்தூர்,  சின்னாளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் கனமழை பெய்து வருகிறது.  இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்ற மாணவர்களும், அதே போன்று வேலைக்கு சென்ற பொதுமக்களும் கொட்டும் மழையில் நனைந்தபடியே வீடு திரும்பினர்.

மேலும், திண்டுக்கல் மாநகராட்சி சாலை நாகல் நகர்,  பேகம்பூர்,  ஒத்தக்கண் பாலம் பகுதிகளில் மழை தண்ணீருடன் கழிவு நீர் வீட்டு வாசலில் தேங்கி நிற்பதால் குடியிருப்புவாசிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி மேயர்,  மாநகராட்சி ஆணையர் ஆகியோர் மழைநீர் தேங்கி இருந்த பகுதிகளை பார்வையிட்டனர்.

இந்நிலையில், காலை 10 மணி முதல் 2 மணி வரை திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 39 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.  இதனால், திண்டுக்கல் நகரின் பல பகுதிகளில் சாலைகள் முழுவதும் பெருமளவு தண்ணீர் தேங்கியுள்ளது.  இதேபோல திண்டுக்கல் ஆர்.எம். காலனியிலும்,  சாலைகளில் முழங்கால் அளவுக்கு மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.  இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

Tags :
DindigulDistrict administrationHeavy rainNews7Tamilnews7TamilUpdatesWeather Updates
Advertisement
Next Article