இறுதிக்கட்டத்தை எட்டிய விடாமுயற்சி படப்பிடிப்பு! ரிலீஸ் எப்போது?
அஜர்பைஜானில் நடந்து வரும் விடாமுயற்சி படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடைபெற்று வந்த நிலையில், திடீரென படக்குழு சென்னை திரும்பியது. இதற்கான காரணம் குறித்தும் அடுத்தகட்ட படப்பிடிப்பு பற்றியும் தகவல் கிடைத்துள்ளது.
அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கும் திரைப்படம் விடாமுயற்சி. லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடைபெற்றது. ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்தப் படத்திற்காகப் பெரிய பட்ஜெட்டை ஒதுக்கியிருந்தது லைகா. அதுமட்டும் இல்லாமல் அஜித்துடன் அர்ஜுன், த்ரிஷா, ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பல மல்டி ஸ்டார்களும் இப்படத்தில் நடித்து வந்தனர்.
அஜித்தின் 62வது படமான இதனை விக்னேஷ் சிவன் தான் இயக்குவதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் விக்னேஷ் சிவன் விலகியதால் அவருக்குப் பதிலாக மகிழ் திருமேனி கமிட்டானார். இதனால் இந்தப் படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே பிளான் செய்து வைத்திருந்ததை விட தாமதமாக தொடங்கியது. ஆனாலும் படப்பிடிப்பை பிரேக் விடாமல் அடுத்தடுத்த ஷெட்யூல்களில் எடுத்து வந்தார் மகிழ் திருமேனி.
இதுவரை முடிந்த விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் முழுவதும் அஜர்பைஜானில் தான் எடுக்கப்பட்டது. மீதமிருக்கும் பகுதிகளையும் வெளிநாடுகளில் ஷூட் செய்ய மகிழ் திருமேனி பிளான் செய்திருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் விடாமுயற்சி டீம் அஜர்பைஜான் நாட்டில் இருந்து சென்னை திரும்பிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பட்ஜெட் பிரச்னை காரணமாக தான் விடாமுயற்சி டீம் சென்னை திரும்பிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
இதனால் விடாமுயற்சி திரைப்படம் மே மாதம் ரிலீஸாகும் என எதிர்பார்த்த ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். ஆனால், அஜர்பைஜானில் இருந்து சென்னை திரும்பினாலும், விடாமுயற்சி ஷூட்டிங் கேன்சல் ஆகாது என சொல்லப்படுகிறது. அதன்படி சென்னை அல்லது மும்பை பகுதியில் செட் போட்டு படப்பிடிப்பை நடத்த பிளான் செய்யப்பட்டுள்ளதாம்.
இதுவே விடாமுயற்சி படத்தின் கடைசி ஷெட்யூல் ஷூட்டிங் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் விரைவில் படத்தை வெளிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். வேட்டையன், லால் சலாம், இந்தியன் 2 என உச்ச நட்சத்திரங்களின் படங்களை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இதனால் தான் பட்ஜெட் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.