Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மீண்டும் விடாமுயற்சி ஷூட்டிங்... அஜர்பைஜான் பறந்த அஜித்..

04:18 PM Dec 09, 2023 IST | Web Editor
Advertisement

மகிழ்திருமேனி இயக்கும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக நடிகர் அஜித்,  நடிகை த்ரிஷா உள்ளிட்ட படக்குழு அஜர்பைஜான் புறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர், நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் துணிவு.  இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  இதையடுத்து,  அஜித் தன்னுடைய 62-வது படமான விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்தில் நடிகர் அஜித் குமாருக்கு முக்கிய வில்லனாக சஞ்சய் தத்தும் மற்றொரு வில்லனாக நடிகர் ஆரவ்வும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகிழ் திருமேனி இயக்கிய கலகத் தலைவன் படத்தில் வில்லனாக நடித்த ஆரவ் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.  இதனைதொடர்ந்து இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு,  அபுதாபியில் கடந்த அக். 4-ம் தேதி தொடங்கியது.  இதற்காக அஜித்,  த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் அஜர்பைஜான் சென்றனர்.  படப்பிடிப்பு துவங்கி 10 நாள் கூட ஆகாத நிலையில் பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடங்கியது.  ஆனால் அதனால் பாதிப்பு எதுவும் ஏற்படாத வண்ணம் படப்பிடிப்பு நடைபெற்றதாகத் தெரிகிறது.

அண்மையில் அஜித்துக்கான முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததால் ஓய்விற்காக அவர் சென்னை திரும்பியுள்ளதாகத் தகவல் வெளியானது.  இந்நிலையில், படக்குழு மீண்டும் அஜர்பைஜான் சென்றுள்ளது.  இயக்குநர் மகிழ் திருமேனி உள்ளிட்டோர் நேற்று முன் தினம் அங்கு சென்றனர்.  நடிகர் அஜித்குமார் இன்று சென்றார்.  அங்கு சுமார் ஒரு மாதம் படப்பிடிப்பு நடக்கும் என்று கூறப்படுகிறது.

Tags :
விடாமுயற்சிajithajith kumarak 62Cinema updatesMagizh ThirumenimovieNews7Tamilnews7TamilUpdatesThalaTrishaVidaa Muyarchi
Advertisement
Next Article