Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"சூப்பர் டூப்பர் ப்ளாக்பஸ்டர்”- விடாமுயற்சிக்கு 'மங்காத்தா' பட இயக்குநர் பாராட்டு!

அஜித்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் சூப்பர் டூப்பர் ப்ளாக்பஸ்டர் படம் என இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். 
05:12 PM Feb 06, 2025 IST | Web Editor
அஜித்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் சூப்பர் டூப்பர் ப்ளாக்பஸ்டர் படம் என இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். 
Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'விடாமுயற்சி'. இந்தப் படத்தில் ஆரவ், அர்ஜுன், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம்
ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியது.

Advertisement

இதையொட்டி திரையரங்குகளில் ரசிகர்கள் மேள தாளங்கள் முழங்க உற்சாகத்துடன் கொண்டாட்டங்களில் ஈடுப்பட்டனர். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இப்படத்தை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில், இயக்குநர் வெங்கட் பிரபு விடாமுயற்சி படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,

”விடாமுயற்சி திரைப்படத்தில் ஒரு சராசரி மனிதனாக அஜித் நடித்திருப்பது அருமையாக உள்ளது. ஆனால், படத்தில் செம்ம சர்ப்ரைஸாக அமைந்தது அர்ஜூனும், ரெஜினாவும். படக்குழுவினருக்கு என்னுடைய பாராட்டுக்கள். இப்படம் சூப்பர் டூப்பர் ப்ளாக்பஸ்டர்”

இவ்வாறு இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

Tags :
ajith kumarMagizh Thirumenivenkat prabhuVIDAMUYARCHI
Advertisement
Next Article