Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"பிரிவினை ஏற்படுத்த நினைத்தால் காஷ்மீர் போல துண்டாக்கப்படுவீர்கள்" என யோகி ஆதித்யநாத் குறிப்பிட்டாரா? - வைரல் #ScreenShort உண்மையா?

02:33 PM Nov 19, 2024 IST | Web Editor
Advertisement

This News Fact Checked by ‘BOOM’

Advertisement

நீங்கள் பிரிவினையை ஏற்படுத்த நினைத்தால் காஷ்மீர் போல துண்டாக்கப்படுவீர்கள் என உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சொன்னதாக சமூக வலைதளங்கள் ஸ்கிரீன் ஷாட் வைரலாக பரவியது. இந்த பதிவின் உண்மைத் தன்மை குறித்து ஆய்வுக்கு உட்படுத்துவோம்.

உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பெயரில் சமூக வலைதளங்களில் ஸ்கிரீர்ன் ஷாட் வைரலாகி வருகிறது. அதில், " பிரிவினையை ஏற்படுத்த நினைத்தால் காஷ்மீர் போல் துண்டாக்கப்படுவீர்கள், ஒற்றுமையாக இருந்தால் குஜராத் போல் வைக்கப்படுவீர்கள். பிரிவதா, சேர்வதா என்பதை இப்போது முடிவு செய்யுங்க" என்று அப்பதிவில் எழுதப்பட்டுள்ளது. இது யோகி ஆதித்யநாத்தின் அறிக்கை என்று கருதி பயனர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர். இந்த ஸ்கிரீன்ஷாட்டை X இல் பகிர்ந்த சிலர் 'பாபா ஒவ்வொரு பந்திலும் சிக்ஸர் அடித்து இந்தியாவுக்கு துரோகிகளை எரித்துவிடுகிறார்’ என பதிவிட்டனர்.

உண்மை சரிபார்ப்பு :

சமூக வலைதளங்களில் வைரலாகும் பதிவினை பூம் உண்மை சரிபார்ப்பு செய்தி நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தியது. வைரலான எக்ஸ் பதிவானது நவம்பர் 12, 2024 தேதி எழுதப்பட்டிருப்பதை BOOM கவனித்தது. இதனைத் தொடர்ந்து யோகி ஆதித்யநாத்தின் X பக்கத்தை இதுகுறித்த பதிவு இடம்பெற்றுள்ளதா என்பதை தேடினோம். நவம்பர் 12, 2024 தேதியிட்ட அவரது பக்கத்தில் அப்படி எந்த பதிவும் இடம்பெறவில்லை என்பது தெரியவந்தது.

மேலும் வைரலான ஸ்கிரீன்ஷாட்டில் Pikaso.me மூலம் தயாரிக்கப்பட்ட வாட்டர்மார்க் உள்ளது , எனவே இது அந்த இணையதளத்தில் இருந்து திருத்தப்பட்டிருக்கலாம் என தொடர்புடைய முக்கிய வார்த்தைகளுடன் ஊடக அறிக்கைகளையும் தேடினோம். ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலின் போது, ​​காஷ்மீர் பற்றி குறிப்பிடாமல் பேசிய யோகி “ பிரிந்தால் துண்டாக்கப்படுவீர்கள் ” என்ற கருத்துடன் பேசியது பல ஊடகங்களில் விவாதிக்கபட்டது.

ஆகஸ்ட் 26, 2024 தேதியிட்ட நவ்பாரத் டைம்ஸின் அறிக்கையின்படி , உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் ஜென்மாஷ்டமியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், யோகி ஆதித்யநாத், "வங்காளதேசத்திடம் இருந்து பாடம் கற்க வேண்டும், நாம் பிரிந்துவிடக்கூடாது. நாம் பிளவுபடாமல் இருப்போம். இருந்தால், நாம் நேர்மையாக இருப்போம்." என பேசியிருந்தார். எனவே யோகி ஆதித்யநாத்தின் கூற்று என ஸ்கிரீன்ஷாட் தவறாக பகிரப்படுகிறது.

முடிவு :

நீங்கள் பிரிவினையை ஏற்படுத்த நினைத்தால் காஷ்மீர் போல துண்டாக்கப்படுவீர்கள் என உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சொன்னதாக சமூக வலைதளங்கள் ஸ்கிரீன் ஷாட் வைரலாக பரவியது தவறானது போலி என்பது நிரூபணமாகியுள்ளது.

Note : This story was originally published by ‘BOOM’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Fact Checkuttar pradeshYogi Adityanath.YogiA Adityanath
Advertisement
Next Article