Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தூத்துக்குடி எம்பி கனிமொழி கருணாநிதி ’சமோசாவைக் காப்பாற்றுவோம்’ என்ற பதாகையை கைகளில் ஏந்தியிருந்தாரா?

07:37 AM Jun 13, 2024 IST | Web Editor
Advertisement

This news fact checked by Newschecker

Advertisement

தூத்துக்குடி எம்பி கனிமொழி கருணாநிதி  ‘சமோசாவைக் காப்பாற்றுவோம்’ என்ற பதாகையை கைகளில் ஏந்தியிருந்ததாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.  இது குறித்த உண்மைத் தன்மை அறிய நியூஸ் செக்கர் இதனை ஆய்வுக்கு உட்படுத்தியது.  

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளை வென்றது.  இவற்றில் திமுக எம்பிக்கள் 22பேர் வெற்றி பெற்றனர்.  இந்த நிலையில் திமுகவின் நாடாளுமன்ற குழுத் தலைவர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த திங்கள்கிழமை அன்று  திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி நாடாளுமன்ற இரு அவைகளுக்கும் சேர்த்து திமுக துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி தொகுதி எம்பியுமான கனிமொழி கருணாநிதி தலைவராக இருப்பார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கனிமொழி எம்பி பெயரில் பரவும் போலி நியூஸ் கார்டு

திமுகவின் நாடாளுமன்றக் குழு தலைவராக கனிமொழி கருணாநிதி நியமனம் என செய்திகள் தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகின.  இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி எம்பி கனிமொழி  ‘சமோசாவைக் காப்பாற்றுவோம்’  என்ற பதாகையை கைகளில் ஏந்தியிருந்ததாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது.

அந்தப் பதிவின் கேப்சனில்” திமுக 40க்கு40 கேண்டீன்ல பஜ்ஜி சாப்பிட போறதுக்கு இவ்வளவு பில்டப் எதற்கு தலைவர்.  திமுக நாடாளுமன்ற குழுத் தலைவராக கனிமொழி எம்.பி. நியமனம்! T.R. பாலு ஓரங்கட்டப்பட்டார் . கோபாலபுரம் வாரிசு இல்லையா” என்று இந்த நியூஸ்கார்ட் பரவுகிறது. இதனை உண்மையென்று நம்பி பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தது.

உண்மை சரிபார்ப்பு 

தூத்துக்குடி எம்பி கனிமொழி  ‘சமோசாவைக் காப்பாற்றுவோம்’  என்ற பதாகையை கைகளில் ஏந்தியிருந்ததாகப் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அது பற்றிய நியூஸ் செக்கர் ஆய்வு செய்தது.  அதன்படி வைரலாகும் நியூஸ்கார்ட் சன்நியூஸ் வெளியிட்டதாகப் பரவிய நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் ஆராய்ந்தோம்.  அதில், “திமுக நாடாளுமன்ற குழுத் தலைவராக கனிமொழி எம்.பி. நியமனம்!” என்று வெளியிடப்பட்டிருந்த நியூஸ்கார்டில் ’Save Democracy’ என்கிற பதாகையையே கனிமொழி கைகளில் ஏந்தியுள்ளார் என்பது உறுதியானது.

குறிப்பிட்ட நியூஸ்கார்டினை எடுத்தே வைரலாகும் நியூஸ்கார்டினை போலியாக உருவாக்கியுள்ளனர்.  கேலியாக இதனை உருவாக்கியிருந்தாலும் பலரும் இதனை உண்மையென்றே ஷேர் செய்து வருகின்றனர்.  எனவே, சன் நியூஸ் டிஜிட்டல் பிரிவை இது தொடர்பாக கேட்டபோது, “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்து பரவுகிறது” என்று விளக்கமளித்தனர்.

முடிவு :

தூத்துக்குடி எம்பி கனிமொழி ‘சமோசாவைக் காப்பாற்றுவோம்’ என்கிற பதாகையைக் கைகளில் ஏந்தியிருந்ததாகப் பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.  ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று  கேட்டுக் கொள்கின்றோம்.

Note : This story was originally published by Newschecker and Republished by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Fact CheckFakeFake CardFalseKanimozhi KarunanidhiKanimozhi Karunanithi MPSave Samosa
Advertisement
Next Article