Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இந்தியாவின் அமைதியை முஸ்லிம்கள், கம்யூனிஸ்ட்கள் சீர்குழைப்பதாக ஹைதராபாத் நவாப் குற்றம்சாட்டினாரா? - உண்மை என்ன?

09:37 PM Nov 27, 2024 IST | Web Editor
Advertisement

This news Fact Checked by 'Newsmeter'

Advertisement

இந்தியாவின்அமைதியையும் முன்னேற்றத்தையும் சீர்குலைக்க முஸ்லிம்களும் , கம்யூனிஸ்டுகளும் சதி செய்வதாக முதியவர் ஒருவர் குற்றம்சாட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த முதியவர் நவாப் என்றும் முஸ்லிம் என்றும் சமுக வலைதளங்களில் பதிவிடப்பட்டது. இதுகுறித்த உண்மைத் தன்மையை விரிவாக காணலாம்.

காரில் இருந்து முதியவர் ஒருவர் ஊடகங்களுக்கு பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில், இந்தியாவின்அமைதியையும் முன்னேற்றத்தையும் சீர்குலைக்க முஸ்லிம்களும் , கம்யூனிஸ்டுகளும் சதி செய்வதாக அந்த நபர் குற்றம் சாட்டியுள்ளார். அந்த நபர் தன்னை ஹைதராபாத் நவாப் என்றும் முஸ்லீம் சொல்லிக்கொண்டே முஸ்லிம்கள் மற்றும் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராகப் பேசுகிறார். இந்த வீடியோவை பகிர்ந்த பேஸ்புக் பயனர் ஒருவர் வீடியோவைப் பகிர்ந்துகொண்டு இது ஹைதராபாத் நவாப் சொன்ன நேரடி உண்மை" என்று எழுதினார்.

உண்மை சரிபார்ப்பு :

சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவின் கீசுப்ரேம்களின் ரிவர்ஸ் இமேஜ் தேடலுக்கு உட்படுத்தியதில் பிப்ரவரி 16, 2020 அன்று பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட நீளமான வீடியோ கண்டோம். இது குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் ஓவைசி சகோதரர்களுக்கு எதிராக விஸ்வ ஹிந்து பரிஷத்தின் (விஎச்பி) ஆச்சார்யா தர்மேந்திரா பேசுவதை வீடியோ காட்டுகிறது

வைரலான வீடியோ மற்றும் பேஸ்புக் வீடியோவில் யூத் மீடியா டிவியின் லோகோவை கவனித்தோம். இதனைத் தொடர்ந்து, வீடியோ குறித்த முக்கிய வார்த்தைகளைத் தேடினோம். 2020 ஜனவரி 2 அன்று யூத் மீடியா டிவியின் சரிபார்க்கப்பட்ட YouTube சேனலில் வெளியிடப்பட்ட வீடியோவின் நீட்டிக்கப்பட்ட பதிப்பைக் கண்டறிந்தோம். வீடியோவின் தொடக்கத்தில் வைரல் கிளிப்புகள் தோன்றின.

அந்த நபரின் பெயரை சேனல் குறிப்பிடவில்லை என்றாலும், வீடியோவின் சிறுபடத்தில் உள்ள ஹிந்தி வாசகம் அவரை 'மகராஜ்' என்று குறிப்பிடுகிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் ஹைதராபாத் ஓவைசி சகோதரர்கள் போன்ற முஸ்லிம்கள், கம்யூனிஸ்டுகள் மற்றும் தலைவர்களுக்கு எதிராக அவர் பேசுவதை வீடியோ காட்டுகிறது. ஃபேஸ்புக் மற்றும் யூடியூப்பில் வீடியோ வெளியிடப்பட்ட தேதி குறைந்தது 2020 ஆம் ஆண்டிலிருந்து என்பதை உறுதிப்படுத்தியது. இணையத்தில் கிடைக்கும் ஆச்சார்யா தர்மேந்திராவின் படத்தை வைரல் வீடியோவின் ஸ்கிரீன் கிராப்புடன் ஒப்பிட்டுப் பார்த்தோம்.

மேலும் ஆச்சார்யா தர்மேந்திராவின் விவரங்களைப் பார்த்தோம், செப்டம்பர் 19, 2022 அன்று வெளியிடப்பட்ட The Print மற்றும் Aaj Tak இன் அறிக்கைகளைக் கண்டோம் . இந்த அறிக்கைகளின்படி, ஆச்சார்யா தர்மேந்திரா நீண்டகால நோயினால் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஆச்சார்யா தர்மேந்திரா விஸ்வ இந்து பரிஷத்தின் கேந்திரிய மார்க்கதர்ஷக் மண்டலின் முக்கிய உறுப்பினராக இருந்தார். குஜராத் மாநிலம் மால்வாடாவில் ஜனவரி 9, 1942ல் பிறந்த இவர், 1965ல் பசுவதைக்கு எதிரான இயக்கத்தை முன்னின்று நடத்தியதற்காக அறியப்பட்டார்.

முடிவு :

இந்தியாவின் அமைதியையும் முன்னேற்றத்தையும் சீர்குலைக்க முஸ்லிம்களும் , கம்யூனிஸ்டுகளும் சதி செய்வதாக முதியவர் ஒருவர் குற்றம் சாட்டிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில் அவர் தன்னை நவாப் என்றும் முஸ்லிம் என்றும் அடையாளப்படுகிறார். உண்மைச் சரிபார்ப்பில் அந்த முதியவர் விஷ்வ ஹிந்து பரிசத் அமைப்பைச் சார்ந்த தர்மேந்திர ஆச்சார்யா என்றும் தெரியவந்துள்ளது. அவர் 2020ல் காலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Note : This story was originally published by 'Newsmeter' and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
CommunistHyderabadIndiaMuslimsVHP
Advertisement
Next Article