’மிடில் கிளாஸ்க்கு கோவம் வந்தா...?’ - கவினின் ’மாஸ்க்’ பட டிரெய்லர் வெளியீடு..
தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் கதாநாயகர்களில் ஒருவர் கவின். சின்னத்திரையில் பணியாற்றி வந்த கவின் கடந்த 2021 ஆம் வெளியான லிப்ட் திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளிவந்த டாடா, ஸ்டார் ஆகிய படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் கவின் நடிப்பில் வெளியான கிஸ் திரைப்படம் கவலையான விமர்சனங்களை பெற்றது.
இந்த நிலையில் கவின் ‘மாஸ்க்’ என்னும் புதிய படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் விக்ரனன் அசோக் இயக்கும் இந்த படத்தில் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு நடிகை ருஹானி ஷர்மா சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். மாஸ்க் திரைப்படம் வரும் 21ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில்,தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.