Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி நிகழ்வில் பங்கேற்காமல் காந்தி குடும்பம் வியட்நாமுக்கு சுற்றுலா சென்றதா? - உண்மை என்ன?

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவையொட்டி  தேசிய அளவிலான துக்கம் கடைபிடிக்கப்பட்ட நிலையில் அதற்கு மத்தியில் சோனியா காந்தியின் குடும்பத்தினர் விடுமுறைக்காக வியட்நாம் சென்று உணவகத்தில் சாப்பிட்டு சந்தோஷமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் படங்கள் பகிரப்பட்டது
07:55 PM Jan 14, 2025 IST | Web Editor
Advertisement

This News Fact Checked by ‘Boom

Advertisement

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவுடன் சோனியா காந்தி குடும்பத்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காங்கிரஸை குறிவைத்து, தேசிய அளவிலான துக்கத்திற்கு மத்தியில் சோனியா காந்தியின் குடும்பத்தினர் விடுமுறைக்காக வியட்நாம் செல்வதாக இந்த படத்துடன் கூறப்பட்டு வருகிறது. வைரலான புகைப்படம் மன்மோகன் சிங் இறப்பதற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று பூம் கண்டறிந்துள்ளது.

மேலும் டிசம்பர் 22-ம் தேதி ராகுல் காந்தி தனது குடும்பத்தினருடன் டெல்லி கன்னாட் பிளேஸில் உள்ள குவாலிட்டி ரெஸ்டாரன்ட்டுக்கு மதிய உணவு சாப்பிடச் சென்றார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 26 டிசம்பர் 2024 அன்று தனது 92வது வயதில் காலமானார். இதைத் தொடர்ந்து இந்திய அரசு ஏழு நாட்கள் தேசிய அளவில் துக்கம் கடைபிடிப்பதாக அறிவித்தது.

முன்னாள் பிரதமர் மறைவுக்குப் பிறகு பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மன்மோகன் சிங்கின் அஸ்தி கரைக்கும் நிகழ்வில் ராகுல் காந்தி பங்கேற்காதது குறித்தும், தேசிய துக்கத்தின் மத்தியில் வியட்நாம் சென்றது குறித்தும் பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. எனினும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா , இது குறித்து விளக்கம் அளித்து, தனியுரிமையை மனதில் கொண்டு, மன்மோகன் சிங்கின் அஸ்தி கரைக்கும் நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் எந்தத் தலைவரும் பங்கேற்கவில்லை என்றார்.

வைரலான படத்தில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் அவரது கணவர் ராபர்ட் வத்ரா உள்ளிட்ட காந்தி குடும்ப உறுப்பினர்கள் ஒரு உணவகத்தில் அமர்ந்திருப்பதைக் காணலாம். இந்தப் படத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்த ஒரு பயனர் காங்கிரஸைக் கிண்டல் செய்து, 'முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்குக்கு 7 ஆம் தேதி இறுதி அஞ்சலி செலுத்தும் போது வியட்நாமில் காங்கிரஸ் தலைவர்களின் குடும்பத்தினர் தங்கள் மருமகனுடன் சேர்ந்து  உணவருந்துகிறார்கள்”  என எழுதியுள்ளார்.

உண்மைச் சரிபார்ப்பு:

வைரலான புகைப்படத்தைத் கூகுளில் தேடியதில், 2024 டிசம்பர் 22 தேதியிட்ட பல செய்தி அறிக்கைகளைக் கண்டறிந்தோம், அதில் வைரலான புகைப்படம் இருந்தது. என்டிடிவி இந்தியாவின் அறிக்கையின்படி , டிசம்பர் 22 அன்று, தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற  உணவகத்திற்கு ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் உணவு அருந்த வந்திருந்தனர். சோனியா காந்தி, பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ரா, மகள் மீராயா மற்றும் மாமியார் மவுரீன் வத்ரா ஆகியோரும் உடன் இருந்தனர். வைரலான படத்தைத் தவிர, மதிய உணவின் மற்ற படங்களை டிசம்பர் 22 இன் ஏபிபி நியூஸின் புகைப்பட கேலரியில் காணலாம் . காந்தி குடும்பத்தின் இந்த மதிய உணவு தொடர்பான செய்திகளை பல முக்கிய ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.

https://www.instagram.com/p/DD4JGMyy1D5/?utm_source=ig_web_copy_link

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முடிந்ததும், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, டிசம்பர் 22ம் தேதி மதிய உணவிற்கு சென்றார். இது தொடர்பான புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்  பதிவிட்டுள்ளார். படங்களை பகிர்ந்த ராகுல் காந்தி  "குடும்பத்துடன் ஒரு பிரபல உணவகத்தில் மதிய உணவு. நீங்களும் சென்றால், சோலே பாதுரே முயற்சி செய்யுங்கள்." என எழுதியிருந்தார்.

குவாலிட்டி கேட்டரிங் நிறுவனம் தனது இன்ஸ்டாகிராமில் இந்த மதிய உணவை வழங்கும் படத்தைப் பகிர்ந்துள்ளது, அதில் சோனியா காந்தி பாதுரேவுடன் காணப்படுகிறார்.

முடிவு :

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவையொட்டி  தேசிய அளவிலான துக்கம் கடைபிடிக்கப்பட்ட நிலையில் அதற்கு மத்தியில் சோனியா காந்தியின் குடும்பத்தினர் விடுமுறைக்காக வியட்நாம் சென்று உணவகத்தில் சாப்பிட்டு சந்தோஷமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் படங்கள் பகிரப்பட்டுள்ளது. இதுகுறித்து பூம் ஆய்வு செய்ததில் இப்படம் மன்மோகன் சிங் மறைவுக்கு 4நாட்களுக்கு முந்தையது என்றும் அவை டெல்லியில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில் எடுக்கப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது

Note : This story was originally published by ‘Boom and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Dr Manmohan SinghGandhi FamilyRahul gandhisonia gandhi
Advertisement
Next Article