Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தவெக தலைவர் விஜய் எம்.ஜி.ஆர்-இன் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினாரா?

09:28 PM Feb 01, 2025 IST | Web Editor
Advertisement

This News Fact Checked by ‘Telugu Post

Advertisement

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்-இன் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தியதாக சமூக ஊடக்கப்பதிவு வைரலாகி வருகிறது. அதுகுறித்து உண்மைத் தன்மையை இங்கு காணலாம்.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்-இன் 108-வது பிறந்தநாளையொட்டி, ஜன.17, 2025 அன்று அவரது உருவச்சிலை மற்றும் படங்களுக்கு அரசியல் கட்சி தலைவர்களால் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் எம்.ஜி.ஆர்-ன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தியதாக புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பயனர் ஒருவர் எக்ஸ் (x) தளத்தில் விஜய்-இன் புகைப்படத்துடன், “எடிட் -னு நினச்சேன் உண்மையாவே பண்ணிருக்கான். ஆகப்பெரும் அரசியல் தற்குறியா இருக்காரே அண்ணா” என பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு 85.3K பார்வைகள் மற்றும் 1Kக்கு மேற்பட்ட விருப்பங்களை பெற்றுள்ளது.

வைரலான பதிவின் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது;

உண்மை சரிபார்ப்பு : 

இந்த பதிவில் கூறப்பட்டுள்ளது தவறானது என தெலுங்குபோஸ்ட் உண்மை சரிபார்ப்பு குழு, தெளிவுப்படுத்தியுள்ளது. பதிவில் பயன்படுத்தப்பட்டுள்ள படங்கள் மற்றும் வார்த்தைகளை கூகுள் லென்ஸ் உதவியுடன் தேடியதில், இதுதொடர்பாக பல செய்திகள் கிடைத்தன. அவற்றில் எம்ஜிஆர் பிறந்தநாள் அன்று பல அரசியல் கட்சி தலைவர்கள் அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் த.வெ.க தலைவர் விஜய் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் எம்.ஜி.ஆருக்கு மரியாதை செலுத்தியதாக New Indian Express நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.

இதனை வைத்து தவெக தலைவர் விஜய்யின் சமூக ஊடகப் பதிவுகளை ஆய்வு செய்ததில், அவர் எம்.ஜி.ஆர்-இன் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்ததாக பரவும் புகைப்படங்கள் போல, எந்த படமும் கிடைக்கவில்லை.

ஆனால் விஜய்யின் X வலைத்தளப் பக்கத்தில் பொய்யாக பரப்பட்ட பதிவு போன்ற மற்றொரு பதிவு கண்டறியப்பட்டது. அந்தப் பதிவில் இருந்தது இந்திய சுதந்திரத்திற்காக போராடிய வீரமங்கை வேலுநாச்சியார் என்பது தெரியவந்தது. வேலுநாச்சியாரின் பிறந்தநாளையொட்டி, அவரின் புகைப்படத்திற்கு விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார் என்பது தெரியவந்தது.

 

முடிவு:

விஜய் எம்.ஜி.ஆர்-இன் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தவில்லை. தனது கட்சியின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான வேலு நாச்சியாரின் உருவப்படத்திற்கே மரியாதை செலுத்தியுள்ளார். எனவே எம்.ஜி.ஆர் படத்திற்கு விஜய் மரியாதை செலுத்தினார் என விஜய் குறித்து தற்போது பரவும் செய்தி தவறானது.

Note : This story was originally published by ‘Telugu Postand Republished by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
ADMKFact CheckMGRShakti Collective 2024tvkTVK Vijayvijay
Advertisement
Next Article