மருத்துவமனையில் சைஃப் அலி கானை திரை மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் சந்தித்தார்களா? - உண்மை என்ன?
This News Fact Checked by ‘Vishvas News’
கடந்த சில நாட்களுக்கு முன்பு சைஃப் அலிகான் தாக்கப்பட்டதை அடுத்து, அவர் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன் தினம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த நிலையில் தற்போது சிலர் படத்தொகுப்பை வைரலாக்கி வருகின்றனர். இந்த படத்தொகுப்பில் சைஃப் அலி கானுடன் கரீனா கபூர் மற்றும் சல்மான் கான் ஆகியோரைக் காணலாம். பயனர்கள் இந்த புகைப்படத்தை உண்மையானது என்றும், சயீஃப்பை சந்திப்பதற்காக சல்மான் கான் மருத்துவமனைக்கு வந்திருப்பதாகவும் நம்பி வருகின்றனர்.
விஸ்வாஸ் நியூஸ் தனது விசாரணையில் வைரலான கூற்று தவறானது என்று கண்டறிந்தது. செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட வைரல் படங்கள் இப்போது உண்மையானவை என தவறான கூற்றுகளுடன் பகிரப்படுகின்றன.
வைரலான பதிவில் என்ன பகிரப்பட்டுள்ளது?
கபார் பஞ்சாப் எனும் ஃபேஸ்புக் பக்கம் ஒரு வைரல் பதிவைப் பகிர்ந்து, "மருத்துவமனையில் இருந்து சைஃப் அலிகானின் படங்கள் வெளிவந்துள்ளன. சல்மான் கானும் மருத்துவமனைக்கு வந்தடைந்தார்” என பகிர்ந்திருந்தார். இதேபோல முஃபீத் கான் என்ற முகநூல் பயனர் ஷாருக்கானின் படத்தைப் பகிர்ந்து , "சைஃப் அலி கான் மருத்துவமனையைச் ஷாருக் கான் சந்தித்தார் என பகிர்ந்திருந்தார்.
மேலும் கபார் பஞ்சாப் பக்கம் அனுஷ்கா ஷர்மா மற்றும் விராட் கோலியின் படங்களைப் பகிர்ந்து "விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோர் மருத்துவமனையில் சைஃப் அலிகானை சந்திக்க வந்துள்ளனர்" என்று எழுதியிருந்தது.
உண்மை சரிபார்ப்பு :
சல்மான் கானின் மருத்துவமனை வருகை குறித்த பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டறிய, தொடர்புடைய முக்கிய வார்த்தைகளுடன் கூகுளில் தேடினோம். வைரலானது தொடர்பான நம்பகமான ஊடக அறிக்கைகள் எதையும் நாங்கள் கண்டறியவில்லை.
ஷாருக்கான் புகைப்படத்தை சைட் இன்ஜின் மூலம் தேடினோம். புகைப்படம் 87 சதவீதம் AI-உருவாக்கப்பட்டதாக சைட் இன்ஜின் தெரிவித்தது.
விராட் கோலி குறித்து அனுஷ்கா சர்மா
விராட் மற்றும் அனுஷ்கா சர்மாவின் படங்களை hivemoderation.com கருவி மூலம் தேடினோம். முதல் புகைப்படத்தில் 99 சதவீதமும், இரண்டாவது புகைப்படத்தில் 99 சதவீதமும், மூன்றாவது புகைப்படத்தில் 97 சதவீதமும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டவை என்று கருவி கூறுகிறது.
முடிவு:
சைஃப் அலி கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரை சல்மான் கான் சந்தித்ததாக வைரலான படங்கள் உண்மையானவை அல்ல. இந்த படங்கள் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டவை என விஸ்வாஸ் நியூஸ் தனது விசாரணையில் கண்டறிந்துள்ளது.
Note : This story was originally published by ‘Vishvas News’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.