Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

All Eyes on PoK என பிரதமர் மோடி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தாரா? - உண்மை என்ன?

08:35 AM May 31, 2024 IST | Web Editor
Advertisement

This news Fact Checked by Newschecker

Advertisement

பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் All Eyes on PoK என்கிற போஸ்டர்களை பகிரப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் ஸ்கிரீன் ஷாட் ஒன்று வைரலாக பரவியது. இதன் உண்மைத் தன்மை குறித்து நியூஸ் செக்கர் செய்தி நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தியது. இது குறித்து விரிவாக காணலாம்

உலகை அதிர வைத்த All Eyes on Rafah

கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று காசாவின் ராஃபா பகுதியில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள தல் அல் – சுல்தான் பகுதியில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.  இதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துனர். உயிரிழந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என காசா சுகாதாரத் துறை தெரிவித்தது.

சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளை மீறி ராஃபா நகரின் மையப் பகுதிக்கு இஸ்ரேல் ராணுவம் முன்னேறியுள்ளதையடுத்து,  அப்பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.  அப்பகுதி மக்கள் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த உறவினர்களின் உடல்களை வாகனங்களில் எடுத்துச் செல்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இந்தியா உட்பட உலகின் பல பிரபலங்கள் All Eyes on Rafah என்கிற சொல்லாடலை பயன்படுத்தி ராஃபா எல்லையில் உள்ள அகதிகள் முகாமின் படங்களை பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக இந்த இணைய பிரசாரம் மேற்கு ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் தீவிரமடைந்துள்ளது.

இந்திய அளவில் சினிமா நடிகர்களான வருண் தவான், அலி கோனி,  சமந்தா  மற்றும் திரிப்தி டிம்ரி, துல்கர் சல்மான், ஷானே நிகாம்  உட்பட  பல பிரபலங்கள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கம் மற்றும் ஸ்டோரிக்களில்  “ஆல் ஐஸ் ஆன் ரஃபா”  என்கிற கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

All Eyes on PoK என பிரதமர் மோடி ஸ்டோரி பகிர்ந்தாரா?

பாஜக தொடர்ச்சியாக இரண்டு முறை ஆட்சியில் இருந்த நிலையில் மூன்றாவது  முறையாக மத்தியில்  மீண்டும் ஆட்சியைப் பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது.  பாஜகவின் பல உயர்மட்டத் தலைவர்கள் தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன்  இணைக்கப்படும் என்று தேர்தல் பரப்புரையில் பேசினர்.  சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில், உள்துறை அமைச்சர் அமித் ஷா , பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்றும், "நாங்கள் அதை திரும்பப் பெறுவோம்" என்றும் பேசியிருந்தார்.  அதேபோல பாஜக முதலமைச்சர்களான ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் மோடி 3.0 வில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்படும் என்று பேசினர்.


இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் “All Eyes on PoK”  என்கிற ஸ்கிரீன் ஷாட் ஒன்று இணையத்தில் வைரலானது.

உண்மை சரிபார்ப்பு :

முதலாவதாக பிரதமர் மோடியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் All Eyes on PoK எனும் ஸ்டோரி இருக்கிறதா என ஆராய்ந்ததில் அப்படி எந்த பதிவுகளும் இடம்பெறவில்லை என்பது உறுதியானது. மேலும் "All Eyes On PoK" மற்றும் "PM Modi" என்கிற முக்கிய வார்த்தைகளை வைத்து கூகுள் கீவேர்ட் தேடுதலுக்கு உட்படுத்தியபோது ​​அத்தகைய படம் நரேந்திர மோடியின் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்ததற்கான எந்த ஆதாரப்பூர்வமான தகவல்களும் கிடைக்கவில்லை.  அதேபோல மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள PIB மற்றும் DD செய்திகள் பிரதமரின் இதுபோன்ற எந்த செய்தியையும் தெரிவிக்கவில்லை என்பது உறுதியானது.

மேலும் All Eyes on PoK எனும் படத்தை பிரபல பாஜக ஆதரவு யூடியூபரான யெல்விஷ் யாதவ் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். All Eyes on Rafah பிரசாரத்திற்கு எதிர்வினையாற்றும் விதமாக இந்த படத்தை அவர் பகிர்ந்திருந்தார்.

வைரலான படத்தைப் கூகுள் லென்ஸ் தேடலுக்கு உட்படுத்தியபோது பிரதமரின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியின்  ஸ்கிரீன் ஷாட்டைப் பலர் பகிர்ந்த பதிவுகள் மற்றும் மீம்கள் என பல இடுகைகளுக்கு அவை அழைத்துச் சென்றது. அதேபோல மே 28 அன்று இரவு 10:09 மணிக்குத்தான்  All Eyes on PoK  என்ற சொற்றொடர்  ஒரு X பயனரின் பதிவில் முதன் முதலில்  காணப்பட்டது . அந்த X பதிவின் கமெண்ட் செக்சனில் @Incognito_qfs இன் இடுகையில் மே 28 அன்று இரவு 10:33 மணிக்கு இப்படம் முதலில் பகிரப்பட்டதை நியூஸ் செக்கர் உறுதி செய்துள்ளது.  மேலும் இதேபோல All Eyes on Thailand, All Eyes on June 4 போன்ற படங்களும் சில சமூக வலைதள பயனர்களால் இணையத்தில் பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முடிவு :

பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் All Eyes on PoK என்கிற போஸ்டர் பகிரப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவிய ஸ்கிரீன் ஷாட் போலி என்பது உறுதியாகியுள்ளது. All Eyes on PoK என்கிற படத்தை பிரதமர்  வெளியிட்டார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பது ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

Note : This story was originally published by Newschecker and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
All Eyes on PoKAll Eyes On RafahFact CheckInstagram StoryPM Modi
Advertisement
Next Article