Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

எலான் மஸ்க் CNN நிறுவனத்தை 3 பில்லியன் டாலர்களுக்கு வாங்கினாரா? உண்மை என்ன?

06:48 PM Dec 02, 2024 IST | Web Editor
Advertisement

This news Fact Checked by PTI

Advertisement

அமெரிக்க ஒளிபரப்பு நிறுவனமான CNN சேனலை 3 பில்லியன் டாலர்களுக்கு எலான் மஸ்க் வாங்கியதாக சமூக ஊடகங்களில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

தொழில்நுட்ப தொழில்முனைவோரும் ட்விட்டர் (எக்ஸ்) உரிமையாளருமான எலான் மஸ்க் அமெரிக்க ஒளிபரப்பு நிறுவனமான CNN ஐ 3 பில்லியன் டாலர்களுக்கு வாங்குவதாக சமீபத்தில் சமூக ஊடகங்கள் பரபரப்பாக வைரலாகி வருகிறது. இருப்பினும், PTI Fact Check Desk, அதன் விசாரணையில், அந்தக் கூற்று போலியானது என்று கண்டறிந்துள்ளது. இந்த கூற்று ஒரு நையாண்டி கட்டுரையில் இருந்து தோன்றியது, இது ஒரு செய்தி அறிக்கையாக சமூக ஊடக பயனர்களால் பகிரப்பட்டது கண்டறியப்பட்டது.

எலான் மஸ்க் CNN ஐ 3 பில்லியன் டாலர்களுக்கு வாங்க ஒப்புக்கொண்டதாகக் கூறும் ஒரு பதிவு நவம்பர் 10 அன்று பேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டுள்லது.

பதிவின் தலைப்பு, “எலான் மஸ்க் CNN ஐ வாங்க $3 பில்லியனுக்கு ஒப்புக்கொண்டார். எலான் மஸ்க் CNN கையகப்படுத்துதலைக் கவனிக்கிறார் என்று கூறப்படுகிறது: மீடியாவை சரிசெய்வேன், ஒரு நேரத்தில் ஒரு நெட்வொர்க் 💪 விரும்புகிறேன்!" என பதிவிடப்பட்டிருந்தது.

பதிவிற்கான இணைப்பு மற்றும் காப்பக இணைப்பு இதோ. அதன் ஸ்கிரீன்ஷாட் கீழே உள்ளது: 

உண்மை சரிபார்ப்பு:

தனிப்பயனாக்கப்பட்ட முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி சமூக ஊடக பக்கங்கள் ஸ்கேன் செய்யப்பட்டன. அதன்மூலம் பல பேஸ்புக் பயனர்கள் இதே கோரிக்கையைப் பகிர்ந்துள்ளது கண்டறியப்பட்டன.

அத்தகைய இரண்டு பதிவுகளை இங்கே காணலாம். அவற்றின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்புகளை முறையே இங்கே, இங்கே காணலாம். 

விசாரணையின் அடுத்த பகுதியில், கூகுளில் தனிப்பயனாக்கப்பட்ட முக்கிய வார்த்தை தேடல் நடத்தப்பட்டது. ஆனால் சமூக ஊடக பதிவுகளில் கூறப்பட்ட உரிமைகோரலை உறுதிப்படுத்தும் எந்த உண்மையான அறிக்கையும் இல்லை. 

இதிலிருந்து ஒரு குறிப்பை எடுத்துக்கொண்டு, வைரல் பதிவுகளில் பயன்படுத்தப்பட்ட தலைப்பு Google-ல் தேடப்பட்டது. மேலும் SpaceXMania என்ற இணையதளத்தில் அதே தலைப்புடன் ஒரு கட்டுரை இருப்பது தெரியவந்தது.

அக்டோபர் 18, 2024 அன்று வெளியிடப்பட்ட கட்டுரைக்கான இணைப்பு இதோ. அதன் ஸ்கிரீன்ஷாட் கீழே உள்ளது.

மேலே உள்ள ஸ்கிரீன்ஷாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல, நையாண்டி வகையின் கீழ் கட்டுரை பதிவிடப்பட்டது கவனிக்கப்பட்டது.

அதன் பிறகு இணையதளத்தை ஸ்கேன் செய்து, பதிவு செய்யப்பட்ட பக்கத்தின் 'About me' பக்கம் கண்டறியப்பட்டது. அது மஸ்க்கை மையமாகக் கொண்ட "புதிய போலிச் செய்திகள், சில மோசமான பகுப்பாய்வு மற்றும் நையாண்டிகள்" ஆகியவை பதிவிடப்படும் என்று குறிப்பிடுகிறது.

சமூக வலைதளப் பக்கத்திற்கான இணைப்பு இங்கே உள்ளது. அதன் ஸ்கிரீன் ஷாட் கீழே உள்ளது:

அந்த நையாண்டி இணையதளத்தில் எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ், நாசா, டெஸ்லா மற்றும் நையாண்டி என்ற தனி பிரிவுகள் இருப்பது தெரியவந்தது. அதன் ஸ்கிரீன்ஷாட் கீழே உள்ளது: 

அதைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் ஒரு நையாண்டி கட்டுரை உண்மையான செய்தியாகப் பகிரப்பட்டது என்று முடிவு செய்யப்பட்டது.

முடிவு:

பல சமூக ஊடக பயனர்கள் எலான் மஸ்க் அமெரிக்க ஒளிபரப்பாளரான CNN ஐ 3 பில்லியன் டாலர்களுக்கு வாங்க ஒப்புக்கொண்டதாகக் கூறினர். இதுகுறித்த விசாரணையில், போலி செய்தி ஒரு நையாண்டி கட்டுரையில் இருந்து உருவானது என்று கண்டறியப்பட்டது.

Note : This story was originally published by PTI and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
AcquisitionCNNelon muskFact CheckMediaNews7TamilShakti Collective 2024space XTeam ShaktiTelevisionTwitter
Advertisement
Next Article