Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு விழா மேடையில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை பின்னால் வரிசையில் அமரும்படி கூறினார்களா?

12:51 PM Jan 23, 2025 IST | Web Editor
Advertisement

This News Fact Checked by ‘India Today

Advertisement

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு விழா மேடையில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை பின்புறம் சென்று அமரச்சொன்னதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

இந்த செய்தியை வீடியோ வடிவில் காண...

அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் ஜனவரி 20ம் தேதி பதவியேற்றார். இவ்விழாவில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் நிதா மற்றும் முகேஷ் அம்பானி உட்பட பல முக்கிய இந்தியர்கள் கலந்து கொண்டனர். விழாவில் இந்திய அரசின் சார்பில் ஜெய்சங்கர் முன்வரிசையில் அமர்ந்திருந்தார்.

ஆனால், விழா நடந்து கொண்டிருந்தபோது ஜெய்சங்கரை பின்னால் உட்காரச் சொன்னதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன. இந்த வலியுறுத்தலுடன், விழாவின் வீடியோ கிளிப்பை மக்கள் பகிர்ந்து வருகின்றனர். அதில் ஒரு பெண் ஜெய்சங்கரை அணுகி சைகை செய்வதைக் காணலாம். வீடியோவில் எழுதப்பட்ட வாசகம், அந்த பெண் மத்திய அமைச்சரை வெளியேறச் சொன்னதாகவும், ஆனால் அவர் வெளியேற மறுத்துவிட்டதாகவும் குற்றம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் (எக்ஸ்) இல் இந்த கிளிப்பைப் பகிர்ந்த ஒருவர், “அமெரிக்க ஜனாதிபதி விழாவில் ஜெய்சங்கரை பின் வரிசையில் நிற்கச் சொன்னார்கள். அவர் வெட்கமின்றி மறுத்துவிட்டார். உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்திற்கு அவரால் இதைவிட என்ன அவமானம் கொண்டுவர முடியும்!” என பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்த உண்மை சரிபார்ப்பில், மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முன்னால் நின்ற ஒரு ஒளிப்பதிவாளரிடம் பின்னால் செல்லச் சொன்னது தெரியவந்தது.

உண்மை சரிபார்ப்பு:

வைரல் கிளிப்பின் இடது மூலையில் “JICCC” என்று எழுதப்பட்டிருப்பது தெரிகிறது. இதிலிருந்து ஒரு குறிப்பை எடுத்துக் கொண்டு, டிரம்பின் பதவியேற்பு விழாவின் முழுமையான வீடியோவை, தொடக்க விழாக்களுக்கான காங்கிரஸ் குழுவின் யூடியூப் சேனலில் கிடைத்தது. அங்கு அது நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இந்த வீடியோவில், விழா தொடங்கியதில் இருந்து ஜெய்சங்கரை முன் வரிசையில் காண முடிந்தது. மூன்று மணி நேரம், எட்டு நிமிடங்கள் மற்றும் 19 வினாடிகளில், ஒரு பெண் ஒளிப்பதிவாளர் அமைச்சருக்கு அருகில் அமர்ந்திருப்பதைக் காண முடிந்தது. அப்போது, ​​மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் முன் சென்று அமர்ந்து, டொனால்ட் டிரம்ப், அமெரிக்க முன்னாள் அதிபர்கள் உட்பட அனைவரும் நின்றிருந்த மேடையை ஒளிப்பதிவாளர் புகைப்படம் எடுக்கத் தொடங்கினார். வைரலாகும் கிளிப், விழாவின் இந்த பகுதியிலிருந்து எடுக்கப்பட்டது.

பின்னர், 3 மணி நேரம், எட்டு நிமிடங்கள் மற்றும் 53 வினாடிகளில், வேறொரு வரிசையிலிருந்த பெண் ஒருவர் ஒளிப்பதிவாளரிடம் நடந்து செல்வதை காண முடிந்தது. அவர் ஒளிப்பதிவாலரிடம் சென்று, பின்புறம் செல்லும்படி கூறினார். வைரல் கிளிப்பில் கூறப்பட்டுள்ளபடி அந்த பெண் ஜெய்சங்கரின் தோளைத் தொடவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. அதன் பிறகு, ஒளிப்பதிவாளர் சென்று அமர்ந்தார்.

பின்னர், மூன்று மணி நேரம், ஒன்பது நிமிடங்கள் மற்றும் 18 வினாடிகளில், கேமராமேன் பின்னால் நகர்வதைக் காண முடிந்தது. டிரம்பின் உரை மற்றும் விழா முழுவதும், ஜெய்சங்கர் தனது இடத்தை விட்டு மாறாமல் முன் வரிசையில் இருந்தார்.

டிரம்பின் விழாவின் வீடியோக்களை பல்வேறு செய்தி இணையதளங்கள் நேரலையில் ஒளிபரப்பியதும் தெரியவந்தது. ஜெய்சங்கரை முன் வரிசையில் மட்டுமே பார்க்க முடியும்.

வைரல் கூற்றுகள் தவறானவை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. விழாவில் ஒளிப்பதிவாளர் ஒருவரை பின்னால் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை அல்ல என நிரூபிக்கப்பட்டது.

Note : This story was originally published by 'India Today’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
AmericaDonald trumpFact CheckJai shankarMEANews7Tamilnews7TamilUpdatesShakti Collective 2024Team Shakti
Advertisement
Next Article