கிரிக்கெட் வீரர் விராட் கோலி பிக் பாஸ் போட்டியாளர் அதிதி மிஸ்திரி குறித்து ட்வீட் வெளியிட்டாரா?
This news Fact checked by Vishvas News
விராட் கோலிபிக் பாஸ் போட்டியாளர் அதிதி மிஸ்திரி குறித்து வெளியிட்ட ட்வீட் என பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
விராட் கோலியின் ட்விட்டர் பதிவின் பெயரில் ஒரு ஸ்கிரீன் ஷாட் வைரலாகி வருகிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் போட்டியாளர் அதிதி மிஸ்திரியை கோஹ்லி ஆதரித்ததாகவும், நிகழ்ச்சியின் மிகவும் தகுதியான வெற்றியாளர் என்றும் அவரை அழைத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விஸ்வாஸ் செய்தி நிறுவனம் ஆய்வு செய்ததில் அது போலியானது என தெரியவந்தது. வைரலான ஸ்கிரீன்ஷாட்டில் எழுதப்பட்டதைப் போல விராட் கோலி எதையும் ட்வீட் செய்யவில்லை.
ரியாலிட்டி எக்ஸ்பிரஸ் என்ற பேஸ்புக் பயனர் நவம்பர் 25 அன்று ஸ்கிரீன் ஷாட்டை (ஆர்க்கிவ் லிங்க்) வெளியிட்டார். அதில் “@Aditimistry is Ruling the show, she is the only deserving winner #biggboss18” என குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை சரிபார்ப்பு:
விராட் கோலியின் பெயரில் வைரலான ட்வீட்டின் ஸ்கிரீன்ஷாட்டின் உண்மைத்தன்மையை அறிய முதலில் அதை கவனமாக பார்த்தபோது, இந்த ட்வீட்டில் காணப்படும் நீல நிற டிக்கின் உள்ளே உள்ள டிக் குறி காணவில்லை.
வைரல் ட்வீட்டில் பயன்படுத்தப்படும் ட்விட்டர் கணக்கு @imVKohli, இதில் ஆங்கில எழுத்து K என்பது பெரியது. இருப்பினும், தேடலுக்குப் பிறகு, விராட் கோலியின் உண்மையான ட்விட்டர் பக்கத்தில் @imVkohli என்பதைக் கண்டறியப்பட்டது. அதில் K என்ற ஆங்கில எழுத்து சிறியது.
@imVKohli போன்ற பக்கம் இல்லை. போலி ட்வீட்களின் ஸ்கிரீன் ஷாட்களை உருவாக்கும் கருவியைப் பயன்படுத்தி இந்த ஸ்கிரீன் ஷாட் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று இந்த தடயங்கள் தெரிவிக்கின்றன.
இதற்குப் பிறகு, விராட் கோலியின் ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் தேடியபோது, பிக் பாஸ் போட்டியாளர் அதிதி மிஸ்திரியைப் பற்றி அவர் எந்த ஒரு கருத்தையும் தெரிவித்த அவரது பதிவு கிடைக்கவில்லை.
அதிதி மிஸ்திரியைப் பற்றிய முக்கிய வார்த்தைகளைத் தேடும்போது, அவர் ஒரு மாடல் மற்றும் டிஜிட்டல் படைப்பாளி என்பதும், நவம்பர் 29 அன்று அவர் 'பிக் பாஸ் 18' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதும் தெரியவந்துள்ளது.
வைரலான புகைப்படம் குறித்து டைனிக் ஜாக்ரனின் விளையாட்டு ஆசிரியர் அபிஷேக் திரிபாதியிடம் பேசியபோது அவர், “விராட் கோலியின் உண்மையான ட்விட்டர் பக்கம் @imVkohli, அதில் ஆங்கில எழுத்து k சிறியது. அவர் அப்படியொரு X பதிவிடவில்லை” என உறுதிபடுத்தினார்.
இறுதிக்கட்ட விசாரணையில், போலியாக பதிவிட்ட பயனரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஃபேஸ்புக்கில் ரியாலிட்டி எக்ஸ்பிரஸை 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்வது கண்டறியப்பட்டது.
முடிவு:
விஸ்வாஸ் நியூஸ் விசாரித்ததில், விராட் கோலியின் பெயரில் வைரலான எக்ஸ்-போஸ்ட்டின் ஸ்கிரீன் ஷாட் போலியானது. வைரலான ஸ்கிரீன்ஷாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளபடி பிக் பாஸ் போட்டியாளர் அதிதி மிஸ்திரி குறித்து கோஹ்லி எதுவும் ட்வீட் செய்யவில்லை.
Note : This story was originally published by Vishvas News and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.