பாலிவுட் நடிகர் நசிருதீன் ஷா பிரதமர் மோடியை விமர்சித்தாரா? - உண்மை என்ன?
This News Fact Checked by ‘Vishvas News‘
பாலிவுட் நடிகர் நசிருதீன் ஷா பெயரில் போலியான கணக்கு ஒன்றின் மூலம் பிரதமர் மோடியை விமர்சிக்கும் பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த கணக்கு நசிருதீன் ஷாவுக்கு சொந்தமானது அல்ல என உண்மை சரிபார்ப்பின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியை விமர்சித்து ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இந்த கணக்கு பாலிவுட் நடிகர் நசீருதீன் ஷாவுக்கு சொந்தமானது போல் தெரிகிறது. அதில் அவரது புகைப்படம் சுயவிவரப் படமாக இடம்பெற்றுள்ளது. மேலும், அவரது பெயர் அக்கணக்கின் பயனர்பெயராக பயன்படுத்தப்பட்டுள்ளது. சில பயனர்கள் அதை நடிகர் நசீருதீன் ஷாவின் பதிவு என நம்பி, அதைப் பகிர்வதுடன், கருத்தும் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து விஸ்வாஸ் நியூஸ் நடத்திய உண்மை சரிபார்ப்பில், நசீருதின் ஷாவின் பெயரை பயன்படுத்தி போலி கணக்கு மூலம் செய்யப்பட்ட பதிவு வைரல் செய்யப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. மேலும், ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் நடிகர் நசிருதீன் ஷா கணக்கே இல்லை எனவும் கண்டறியப்பட்டுள்ளது. போலி கணக்கின் பயோ மற்றும் கணக்கு பெயர் ஆகிய இரண்டிலும் கணக்கு ஷாவுடன் தொடர்புடையது அல்ல என்பது தெளிவாகிறது.
வைரலான நசீருதீன் ஷா ட்விட்டர் (எக்ஸ்) பதிவில் நவம்பர் 3, 2024 அன்று பிரதமர் மோடியை விமர்சிக்கும் ஸ்கிரீன் ஷாட் வெளியிடப்பட்டது. வைரலான இடுகையின் ஸ்கிரீன் ஷாட்டை ஃபேஸ்புக் பயனர் ரஜனிஷ் காந்த் பகிர்ந்துள்ளார்.
உண்மை சரிபார்ப்பு:
வைரல் இடுகையைச் சரிபார்க்க பயனர் கணக்கை ஸ்கேன் செய்தோம். இந்த கணக்கு நசீருதின் ஷாவுடன் தொடர்புடையது அல்ல என்று பயோ மூலம் தெரியவந்துள்ளது. பிப்ரவரி 8, 2021 அன்று NDTV இந்தியா இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தியில், PTI ஐ மேற்கோள் காட்டி, நசீருதின் ஷாவின் மனைவியும் நடிகையுமான ரத்னா பதக் ஷா, நசீருதின் ஷாவிற்கு ட்விட்டர் (எக்ஸ்) கணக்கு இல்லை என்பதை உறுதிப்படுத்தினார்.
மும்பையில் உள்ள டைனிக் ஜாக்ரனின் சிறப்பு நிருபர் ஸ்மிதா ஸ்ரீவஸ்தவாவை நாங்கள் தொடர்பு கொண்டோம். அவர் நசீருதின் ஷா பெயரில் போலி கணக்கில் இருந்து பதிவு செய்யப்பட்டது என்பதை உறுதிப்படுத்தினார். இதற்கு முன்பும் இதேபோன்ற சம்பவம் பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹா பெயரில் போலியான கணக்கு மூலம் நிகழ்ந்தது.
ட்விட்டர் விதிகளின்படி, பகடி போன்ற கணக்குகளில் மற்றொரு நபரின் அடையாளத்தைப் பயன்படுத்தலாம். ஆனால் அந்தக் கணக்கு அந்த நபருடன் இணைக்கப்படவில்லை என்பதைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். பகடி, வர்ணனை மற்றும் ரசிகர் கணக்குகள் குழப்பத்தைத் தவிர்க்க கணக்கு பெயர் மற்றும் சுயசரிதை இரண்டிலும் தங்களை வேறுபடுத்திக் கொள்ள வேண்டும். சுயவிவரப் படத்தில் உள்ள நபருடன் கணக்கு தொடர்புடையது அல்ல என்பதை கணக்கின் பெயர் மற்றும் பயோ வெளிப்படையாக தெளிவுபடுத்த வேண்டும்.
முடிவு:
பிப்ரவரி 2024 இல் நசீருதீன் ஷா என்ற பெயரில் உருவாக்கப்பட்ட போலி கணக்கை ஸ்கேன் செய்தோம். பிரதமர் மோடியை விமர்சிக்கும் பதிவு பாலிவுட் நடிகர் நசீருதின் ஷா பெயரில் தொடங்கப்பட்ட போலி கணக்கில் இருந்து பதிவு செய்யப்பட்டது. அது ஷாவுக்கு சொந்தமான கணக்கு அல்ல என்பதை பயோ தெளிவுபடுத்துகிறது. இருப்பினும், சில பயனர்கள் இந்த இடுகையின் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்கின்றனர், இது உண்மையானது என்று நம்புகிறார்கள்.
Note : This story was originally published by ‘Vishvas News’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.