மகா கும்பமேளாவில் அகிலேஷ் யாதவ் கலந்துகொண்டு புனித நீராடினாரா?
This News Fact Checked by ‘AajTak’
“சமாஜவாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், மகா கும்பமேளாவில் குளித்ததன் மூலம் சனாதனவாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுத்தார்” என வைரலாகும் பதிவு குறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பத்தின் அமிர்த ஸ்னானின் முதல் நாளில் (ஜன. 14), 3.5 கோடிக்கும் அதிகமானோர் நீராடினார்கள், முதல் இரண்டு நாட்களில், நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை 5 கோடியை எட்டியது. இதனிடையே, சில சமூக ஊடக பயனர்கள் ஒரு படத்தைப் பகிர்ந்து, மகா கும்பத்திற்கு வந்த இந்த கோடிக்கணக்கான மக்களில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் பெயரும் உள்ளதாகக் கூறி வருகின்றனர். அந்த புகைப்படத்தில், அகிலேஷ் தண்ணீரில் நின்றுகொண்டிருந்ததாகவும், படம் எடுப்பதற்கு சற்று முன் அவர் குளித்தது போல் தெரிகிறது.
அந்த புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்த ஒருவர், “சமாஜவாதி கட்சியின் தேசிய தலைவர் அகிலேஷ் யாதவ், கும்பத்தில் குளித்ததன் மூலம் சனாதனவாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுத்தார். இனி சனாதானி இந்துக்களின் வாக்குகள் அனைத்தும் SP-க்கே போகும். பாபா ஜி இன்னும் குளிக்கவில்லை.” என பதிவிட்டுள்ளார்.
ஆஜ் தக் உண்மைச் சரிபார்ப்பில், இந்தப் படம் மகா கும்பமேளா படம் அல்ல, 2025 ஜனவரி 14-ம் தேதி அகிலேஷ் கங்கை ஹரித்வாரியில் குளித்த போது எடுத்தது என்று கண்டறியப்பட்டது.
உண்மை சரிபார்ப்பு:
அகிலேஷ் யாதவ் போன்ற பெரிய தலைவர் மகா கும்பத்திற்கு வந்திருந்தால் கண்டிப்பாக இது குறித்து செய்திகள் வெளியாகியிருக்கும். ஆனால், தேடியதில் இது குறித்து எந்த செய்தியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்த தலைகீழ் தேடலில், அகிலேஷ் யாதவின் ட்வீட்டில் வைரலான படம் கிடைத்தது. ஜனவரி 14, 2025 தேதியிட்ட அந்த ட்வீட்டில் மேலும் 2 படங்களுடன் இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள அகிலேஷ் யாதவ், “மகர சங்கராந்தியின் புனிதத் திருநாளில் மகா கங்கையின் ஆசீர்வாதத்தை நாடினேன்” என்று பதிவிட்டிருந்தார்.
பிறகு, இதுகுறித்து வெளியான செய்திகளும் கிடைத்தது. மகர சங்கராந்தி அன்று ஹரித்வாரில் உள்ள கங்கையில் அகிலேஷ் யாதவ் நீராடினார் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இது அகிலேஷின் தனிப்பட்ட வருகை, இது ஹரித்வாரில் உள்ள உள்ளூர் கட்சித் தொண்டர்களுக்குக் கூடத் தெரிவிக்கப்படவில்லை. வருகைக்குப் பிறகு, அவர் தனது புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டார், அதில் அகிலேஷ் ஹரித்வாரின் கங்கையில் நீராடுவதைக் காண முடிந்தது.
நவ்பாரத் டைம்ஸின் அறிக்கையின்படி, அகிலேஷ் ஜனவரி 14 அன்று உத்தரகாண்டில் உள்ள ஜாலி கிராண்ட் விமான நிலையத்தை அடைந்து பின்னர் அங்கிருந்து ஹரித்வாருக்கு புறப்பட்டார். அங்கு கங்கையில் நீராடினார். மேலும், அவர் தனது குடும்பத்தினருடன் நமாமி கங்கை நதி பகுதியில் பூஜை செய்து தனது மாமா ராஜ்பால் சிங் யாதவின் அஸ்தியை கங்கையில் கரைத்தார். ராஜ்பால் நீண்ட காலமாக உடல் நலக்குறைவால் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் இருந்து பின் ஜனவரி 9ம் தேதி இறந்தார்.
அடுத்த நாளே, அதாவது ஜனவரி 15 அன்று, செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், மகா கும்பம் குறித்து அரசை விமர்சித்தார். இவ்வளவு வளங்கள் இருந்தும், மகா கும்பத்திற்கு வரும் மக்கள் குழப்பத்தை எதிர்கொள்வதாகவும், இந்த குறைபாடுகளை களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.
அவர், “கங்கை ஹரித்வாரிலிருந்து கொல்கத்தா வரை பாய்கிறது, ஒருவர் கங்கையில் எங்கு வேண்டுமானாலும் நீராடலாம், ஒவ்வொரு இடத்திற்கும் அதன் முக்கியத்துவம் உள்ளது. நேற்று நான் ஹரித்வாரில் இருந்தேன். சங்கராந்தி அன்று குளித்தேன். பிரயாக்ராஜ் செல்வது குறித்த கேள்விக்கு, அகிலேஷ் யாதவ், அன்னை கங்கை அழைத்தால் மட்டுமே சங்கத்திற்கு செல்வேன் என்று கூறினார்.
ஜனவரி 27, 2019 அன்று, அகாரா பரிஷத்தின் அழைப்பின் பேரில் அகிலேஷ் யாதவ் பிரயாக்ராஜில் நடந்த கும்பமேளாவை அடைந்தார். பின்னர் அர்த்த கும்பத்தின் போது சங்கத்தில் குளித்தார்.
இந்தச் செய்தியில் உள்ள தகவல்களை எழுதும் வரை, அகிலேஷ் யாதவ் நடந்து கொண்டிருக்கும் மகா கும்பத்தில் நீராட பிரயாக்ராஜை அடையவில்லை.
Note : This story was originally published by ‘AajTak’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.