தனது முதலாளிக்கு முஸ்லிம் பணியாளார் ஜூஸில் சிறுநீர் கலந்து கொடுத்தாரா? - Fact Check
This News Fact Checked by ‘Newsmeter’
இரண்டு பெண்கள் சமையலறையில் வேலை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. முதல் பெண் ஒரு கிளாஸில் ஒரு பானத்தை தயாரித்து விட்டு வெளியேறும்போது, இரண்டாவது பெண் கண்ணாடியில் ஒரு திரவத்தை ஊற்றுகிறார்.
ஃபரிதா காத்தூன் என்ற வீட்டு உதவியாளர் சமாஜ்வாடி கட்சித் தலைவரான அவரது இந்து முதலாளியின் பழச்சாற்றில் சிறுநீரைக் கலந்து பிடிபட்டதாக சமூக ஊடக பயனர்கள் எழுதி வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு ஒரு வகுப்புவாத கோணத்தை சேர்த்து, இதுபோன்றா முஸ்லிம் மதத்தைச் சார்ந்த வீட்டு உதவியாளர்களை பணியமர்த்துவதில் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் குற்றம் சாட்டுகின்றனர்.
சுப்ரண்டல் ஃபோர்ஸ் என்ற X கணக்கில் தவறான தகவல்களைப் பலமுறை பகிரப்பட்ட நிலையுல் தற்போது இந்த வீடியோவைப் பகிரப்பட்டுள்ளது. வீட்டுப் பணிப்பெண் ஃபரிதா காத்தூன், இந்து வீட்டு உரிமையாளருக்குச் பழச்சாற்றில் சிறுநீரைக் கலக்கும்போது கேமராவில் சிக்கியதாகவும் வீட்டின் உரிமையாளர் சமாஜ்வாதி கட்சித் தலைவர் என்றும் அந்த பதிவில் எழுதப்பட்டுள்ளது. மேலும் எனவே உங்கள் பணிப்பெண், வேலையாட்கள் மற்றும் உதவியாளரை கவனமாக தேர்வு செய்யவும் எனவும் குறிப்பிட்டிருந்தது.
இந்த கூற்று தவறாக வழிநடத்துவதாக நியூஸ்மீட்டர் கண்டறிந்துள்ளது. இந்த வீடியோ சமாஜ்வாதி கட்சித் தலைவரின் வீட்டிலோ அல்லது இந்தியாவில் இருந்தோ எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பது உறுதியாகியுள்ளது. வீடியோவின் கீஃப்ரேமின் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலின் மூலம் சரிபார்க்கப்பட்டபோது யூடியூப் சேனலான Oneindia News இன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வீடியோவைக் கண்டறிந்தோம் 'பணிப்பெண் தன முதலாளியின் சாற்றில் சிறுநீரைக் கலந்ததால் பிடிபட்டார்' என அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது ஏப்ரல் 28 2016 அன்று வெளியிடப்பட்டது.
சேனலின் கூற்றுப்படி, குவைத் நாட்டில் உள்ள குடும்பத்தில் பணிபுரியும் ஒரு இளம் வீட்டு உதவியாளரை வீடியோ காட்டுகிறது, அவர் தனது சிறுநீரை ஆரஞ்சு பழச்சாற்றில் காலை உணவுக்கு பரிமாறும் முன் கேமராவில் சிக்கினார் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த குறிப்பை எடுத்துக் கொண்டு, அரபு மொழியில் முக்கிய வார்த்தை தேடலை மேற்கொண்டோம், அதன்படி ஏப்ரல் 2016 இல் YouTube மற்றும் Facebook இல் வெளியிடப்பட்ட வீடியோவை நாங்கள் கண்டறிந்தோம்.
ஏப்ரல் 2016ல் சவுதி அரேபியாவை தளமாகக் கொண்ட Akhbaar24 இன் அறிக்கை அந்த வீடியோவின் ஸ்கிரீன்கிராப்பை உள்ளடக்கியது. இதேபோல அல்-ஷாஹித் சேனலில் திவான் அல்-முல்லா நிகழ்ச்சியில் இடம்பெற்ற இந்த காட்சியில், ஒரு பெண் ஒரு 'கப் ஜூஸ்' தயாரிப்பதைக் காட்டியது. மற்றொருவர் தனி கோப்பையில் சிறுநீர் கழித்து அதை ஜூஸில் சேர்க்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. 2016 இல் இருந்து அரபி21 இன் மற்றொரு அறிக்கை குவைத்தில் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறுகிறது. 2016 இல மிரர் மற்றும் டெலிகிராஃபியின் ஆங்கில அறிக்கைகள் குவைத்தில் வீடியோ பதிவு செய்யப்பட்டதாகக் கூறுகின்றன.
டெலிகிராஃபியின் கூற்றுப்படி அவர்களது பானங்களில் கலப்படம் செய்ததாக குடும்பத்தினர் நீண்ட காலமாக சந்தேகித்தனர், எனவே அவர்கள் சமையலறையில் கேமராக்களை நிறுவ முடிவு செய்தனர். இதன்படி பாதுகாப்புக்கான இரண்டு ஊழியர்களும் தங்கள் அன்றாடப் பணிகளை கண்காணித்தனர். அவர்களில் ஒருவர் பானத்தில் சிறுநீரைக் கலப்பதைக் கண்டுபிடித்தனர். எனவே, அந்த வீடியோ இந்தியாவைச் சேர்ந்தது அல்ல என்றும், அந்தக் கூற்று தவறானது என்றும் முடிவு செய்கிறோம்.
முடிவு :
சமாஜ்வாதி கட்சியைச் சார்ந்த தனது இந்து முதலாளியின் வீட்டில் வேலை செய்யும் முஸ்லிம் பெண் அவருக்கு வழங்கும் பழச்சாற்றில் சிறுநீரை கலந்து கொடுத்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது. நியூஸ் மீட்டரின் ஆய்வில் அவை தற்போதையது அல்ல எனவும் அவை இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல மாறாக குவைத்தில் எடுக்கப்பட்ட வீடியோ என்றும் கண்டறிந்துள்ளது.
Note : This story was originally published by ‘Newsmeter’and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.