Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 4 பேர் உயிரிழப்பா? - மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் மறுப்பு!

01:04 PM Jun 19, 2024 IST | Web Editor
Advertisement

கள்ளக்குறிச்சியில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 4 பேர் உயிரிழந்ததாக வெளியான தகவலை மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் மறுத்துள்ளார். 

Advertisement

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று (ஜூன் 19) ஒரே நாளில் அடுத்தடுத்து பிரவீன், சுரேஷ், சேகர், ஜெகதீஷ் ஆகிய 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் 4 பேரும் கள்ளச்சாராயம் குடித்துதான் உயிரிழந்திருப்பதாக கூறப்பட்டது.  இதுகுறித்து போலீசாருடன் இணைந்து வருவாய்த்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்,  கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தொலைபேசியில் நியூஸ் 7 தமிழுக்கு விளக்கம் அளித்துள்ளார்.  அவர் கூறியதாவது,

“சாராயம் குடித்து 4 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் உண்மையல்ல. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான சிகிச்சைகாக அனுமதிக்கபட்டு இறந்துள்ளனர். இருப்பினும் விசாரித்து வருகிறோம்.  இதுபற்றி செய்தியாளர்களை சந்திக்க உள்ளோம்” இவ்வாறு தெரிவித்தார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு அருகே உள்ள கருணாபுரத்தைச் சேர்ந்த 4 நபர்கள் கள்ளச்சாராயம் அருந்தி இறந்துவிட்டதாக சமூகவலைதளம் மற்றும் செய்தி தொலைகாட்சிகளில் செய்திகள் பரவி வருகின்றன. இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை விசாரணையில் உடற்கூராய்வு முடித்து அறிக்கை பெற்று உண்மை நிலவரத்தை தெரிவிக்கும் வரை இதுபோன்ற செய்திகளை நம்பி அச்சமடைய வேண்டாம் என்று தெரிவித்துக் கொள்கிறோம். ” என கூறப்பட்டுள்ளது.

Tags :
deathKallakurichiNews7Tamilnews7TamilUpdatesSpurious liquor
Advertisement
Next Article