பாகிஸ்தானில் பழைய 500 ரூபாய் நோட்டுகளை 2 சிறுவர்கள் கண்டெடுத்தார்களா?
This News Fact Checked by ‘Boom’
பாகிஸ்தானில் இருந்து பழைய 500 ரூபாய் நோட்டுகளை 2 குப்பை சேகரிக்கும் சிறுவர்கள் கண்டெடுத்ததாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
பழைய 500 ரூபாய் நோட்டுகளை ஸ்கிராப் வியாபாரிகளாக பணிபுரியும் 2 சிறுவர்கள் எடுத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையை சுட்டிக்காட்டு வகையில் இந்த வீடியோ பாகிஸ்தானில் இருந்து வந்ததாக பயனர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
சில பயனர்கள் அந்த வீடியோ உத்தரகாண்டில் இருந்து வந்ததாகவும், இந்த பழைய ரூ.500 நோட்டுகள் ரிஷிகேஷில் உள்ள முனி கி ரெட்டியில் உள்ள குப்பைத் தொட்டியில் காணப்பட்டதாகவும் பதிவிட்டு வருகின்றனர்.
வீடியோவுடன் கூறப்படும் உரிமைகோரல் தவறானது என்பதை BOOM கண்டறிந்துள்ளது. இந்த வீடியோ பாகிஸ்தானில் இருந்து அல்ல இந்தியாவில் எடுக்கப்பட்டது என, உத்தரபிரதேசத்தின் தலைநகரான லக்னோவில் பிரஜேஷ் மிஸ்ரா என்ற பயனர் பதிவு செய்துள்ளார்.
இந்த 34 வினாடிகள் கொண்ட வீடியோவில், அந்த சிறுவர்களிடம் பழைய நோட்டுகளை கேட்டு ஒரு நபர் இந்த சம்பவத்தை வீடியோ எடுக்கிறார்.
8 நவம்பர் 2016 அன்று பிரதமர் நரேந்திர மோடி பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டார். இதன் பின்னர், நவம்பர் 8 நள்ளிரவு முதல் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டன.
ஒரு பயனர் வைரலான வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டு, 'பாகிஸ்தானில் இந்திய ரூபாய். மோடி ஏன் பணமதிப்பிழப்பு செய்தார் என்று காங்கிரஸ் கேட்கிறது. பணமதிப்பு நீக்கம் ஏன் அவசியம் என்று இப்போது புரிகிறது.” என பதிவிட்டுள்ளார்.
பதிவின் காப்பக இணைப்பு.
உண்மை சோதனை
இதுகுறித்து தலைகீழ் படத் தேடல் செய்ததில், TV9 இன் இணையக் கதை கிடைத்தது. அதன்மூலம் இந்த வீடியோ அகிமிஷ்ரா511 என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து பகிரப்பட்டது என்று தெரியவந்தது1.
அதில் ஒரு குறிப்பை பெற்று, அகிமிஷ்ராவின் இன்ஸ்டாகிராம் கண்டறியப்பட்டது. இந்த வீடியோ 27 டிசம்பர் 2024 அன்று பகிரப்பட்டது.
அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலான வீடியோ தொடர்பான பல பதிவுகள் கிடைத்தன. ஒரு வீடியோவில், அதனை உருவாக்கியவர் மக்களுக்கு நன்றி தெரிவித்து, அந்த வீடியோ தனது மருமகனின் கணக்கில் இருந்து பகிரப்பட்டது என்று தெரிவித்துள்ளார். மேலும், பழைய 500 ரூபாய் நோட்டைக் காட்டி, 'அந்த குப்பை சேகரிக்கும் சிறுவர்களை சந்திக்கச் செல்வேன்' எனவும் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவின் கமெண்ட் பிரிவில், அசல் படைப்பாளரான பிரஜேஷ் மிஸ்ராவின் பதில் இருப்பது தெரிந்தது. அதில் வீடியோ லக்னோவில் இருந்து வந்தது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மற்றொரு வீடியோவில், அந்த குழந்தைகளின் தாயை சந்திக்க பிரஜேஷ் மிஸ்ரா சென்றதாகவும், மேலும் அனைத்து போலி செய்திகளையும் மறுத்து, இவர்கள் உத்தரகாண்ட் அல்லது பாகிஸ்தானைச் சேர்ந்த குழந்தைகள் அல்ல என்றும் கூறுகிறார். இவர்கள் லக்னோவில் வசிக்கும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சிறுவர்கள் எனவும் கூறுகிறார்.
ஜனவரி 2, 2025 மற்றும் ஜனவரி 3, 2025 அன்று வெளியிடப்பட்ட வீடியோக்களில், பிரஜேஷ் இரு சிறுவர்களுடன் பேசுவதைக் காணலாம்.
இந்த வீடியோக்கள் அனைத்தும் பிரஜேஷ் மிஸ்ராவின் Instagram, Facebook மற்றும் YouTube சேனலிலும் பதிவிடப்பட்டுள்ளது. வைரல் வீடியோவில் இருந்து சிறுவர்களுடன் ஒரு கலந்துரையாடலை பிரஜேஷ் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இது தவிர, யூடியூப் சேனலில் பகிரப்பட்ட வீடியோவில், பாகிஸ்தான் மற்றும் உத்தரகாண்ட் தொடர்பான பதிவையும் பிரஜேஷ் மறுத்துள்ளார்.
இதனை உறுதிப்படுத்துவதற்காக பிரஜேஷ் மிஸ்ராவைத் தொடர்பு கொண்டபோது, அவர் , “வீடியோவுடன் ஒரு தவறான கூற்று உள்ளது. நான் இந்த வீடியோவை டிசம்பர் 26 அன்று லக்னோவில் உள்ள ஆஷியானா சௌராஹா அருகே படமாக்கினேன். அவ்வழியாகச் செல்லும் போது, நோட்டுக் கட்டுகளுடன் இந்தச் சிறுவர்களைக் கண்டேன்.
அந்த 2 சிறுவர்களும் இந்த பகுதியில் ராக் பிக்கர்களாக வேலை செய்கின்றனர். குப்பைத் தொட்டியில் பழைய ரூ.500 நோட்டுகள் இருந்ததை கண்டுபிடித்தனர். வீடியோ வைரலான பிறகு, நான் அவர்களை சந்திக்க சென்றேன். இருப்பினும், சில சிறுவர்கள் பின்னர் அவர்களிடமிருந்து அந்த நோட்டுகளை பறித்துச் சென்றனர்” என தெரிவித்தார்
அவர் அசல் வீடியோ மற்றும் பழைய ரூ.500 நோட்டுகளின் புகைப்படங்களை அனுப்பி, அந்த நோட்டுகள் உண்மையானவை என்றும் தெரிவித்தார். இருப்பினும், அந்த நோட்டுகள் உண்மையானதா அல்லது போலியானதா என்பதை சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை.
லக்னோவின் ஆஷியானா சதுக்கத்தின் தெருக் காட்சியை கூகுள் மேப்ஸில் பார்த்தபோது, அதில் வைரலான வீடியோவின் 'சாய்பட்டி' கடையின் விளம்பரப் பலகை பின்னால் இருந்தது.
இதேபோன்ற சம்பவம் 2017ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷிலும் நடந்தது. குப்பைக் கிடங்கில் இருந்து சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பழைய ரூ.500 நோட்டுகளை குப்பை சேகரிப்பாளர் கண்டுபிடித்தார். எனினும், வைரலான காணொளிக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பில்லை என விசாரணையில் தெரியவந்தது.
Note : This story was originally published by ‘Boom’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.