Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நீரிழிவு நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி... விரைவில் வருகிறது இன்சுலின் ஸ்ப்ரே...

03:27 PM Nov 02, 2023 IST | Web Editor
Advertisement

நிரிழிவு நோயாளிகளுக்காக விரைவில் இன்சுலின் ஸ்ப்ரே கிடைக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

நீரிழிவு நோய் என்பது வாழ்நாள் முழுவதும் உடலில் இருக்ககூடிய நோய்.  இதை குணப்படுத்த முடியாது.  ஆனால் கட்டுப்படுத்தலாம்.  நோய் கட்டுக்குள் இல்லாத போது உடலில் இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளை சேதப்படுத்தும்.  உடல் உறுப்புகளை பாதிக்க செய்யும்.  அதனால் தான் நீரிழிவு நோயாளிகள் மருந்து,  உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள்.

இன்சுலின் போடுவதால் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். உடலுக்குத் தேவையான இன்சுலின் ஊசி மூலம் போட்டுக் கொள்வதன் மூலம் பலன் கொடுக்கும்.  இன்சுலின் எடுத்துக் கொள்வதற்கு முன் காலை நேர சர்க்கரையும் HbA1C அளவு எவ்வளவு இருக்கிறது என்று கவனிக்க வேண்டும்.  இன்சுலின் போடும்போது எந்த அளவு வரும் வரைக்கும் இன்சுலின் எடுக்கலாம் என்று ஒரு இலக்கை மருத்துவரின் ஆலோசனையுடன் நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.

இன்சுலின் உங்களுக்கு சரியாக வேலை செய்கிறதா என்பதை தொடர்ச்சியாக ரத்த சர்க்கரை அளவை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.  நீங்கள் போடும் இன்சுலின் அளவுகளை சரியாகக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.  ஆரம்பத்தில் எவ்வளவு போட்டீர்கள்,  அந்த அளவை அதிகரித்து இருக்கீங்களா இல்ல குறைச்சு இருக்கீங்களா போன்றவற்றை கணக்கில் கொள்வது முக்கியம்.

இந்நிலையில்,  இன்சுலின் வலியை மிகவும் வேதனையுடன் தாங்கிய நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு இனிப்பான செய்தி வந்துள்ளது.  ஆம், எல்லாம் சரியாக நடந்தால், நோயாளிகள் விரைவில் இன்சுலின் வலியிலிருந்து விடுபட வாய்ப்புள்ளது.  இரண்டு மூன்று வருடங்களில் இன்சுலின் ஸ்ப்ரே கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.  அதன் உதவியுடன், நோயாளி ஊசியைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக வாய்வழியாக இன்சுலின் எடுக்க முடியும்.

2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட நீட்ல்ஃப்ரீ டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட், ஊசி இல்லாத வாய்வழி இன்சுலின் ஸ்ப்ரேவை தயாரிப்பதாகக் கூறுகிறது.  உலகின் முதல் இன்சுலின் ஸ்ப்ரே இதுவாக இருக்கும் என்றும்,  இதற்கு ஓசுலின் என்று பெயரிடப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.  ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிரான்ஸ்ஜீன் பயோடெக் லிமிடெட் என நிறுவனத்தின் மூலம் ஆராய்ச்சி தொடங்கப்பட்டது.

தற்போது அந்த நிறுவனம் பரிசோதனைக்கு அனுமதி கோரியுள்ளது.  இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அதன் நிறுவனர் மற்றும் இயக்குநரான டாக்டர் கே.கோடேஸ்வர ராவ்,  நிறுவனம் பாதுகாப்பு மற்றும் நச்சுயியல் ஆய்வுகளுக்கான ஒப்புதலுக்காக சிடிஎஸ்சிஓ அதாவது மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்புக்கு விண்ணப்பித்துள்ளது என்றார்.  இதற்குப் பிறகு, ஸ்ப்ரேயின் மனித மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படும். புற்றுநோய்,  ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் அல்சைமர் போன்ற நோய்களுக்கான வாய்வழி ஸ்ப்ரேக்களை தயாரிப்பதிலும் நிறுவனம் செயல்பட்டு வருவதாக டாக்டர் ராவ் கூறினார்.

Tags :
DiabetesAwareness | Diabetes | Insulin #Hyderabad | Insulinspray | injection |
Advertisement
Next Article