Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

துருவ நட்சத்திரம் எப்போது ரிலீஸ் - கவுதம் மேனன் கொடுத்த அப்டேட்!

04:57 PM Jan 18, 2024 IST | Web Editor
Advertisement

துருவ நட்சத்திரம் திரைப்படத்தை பிப்ரவரி மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கவுதம் மேனன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கவுதம் மேனன் தயாரித்து இயக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில்,  விக்ரம் கதாநாயகனாக நடித்தியுள்ளார்.  இதில், கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார்.  பார்த்திபன், ராதிகா சரத்குமார்,  சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய  கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு 2017-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 2018-ஆம் ஆண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்தப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து,  பல காரணங்களால் இதன் வெளியீடு தள்ளிப்போனது.  மேலும், படத்தில் இருந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நீக்கப்பட்டதால் அவர் தொடர்பான முதல் பாடல் காட்சிகள் நீக்கப்பட்டு புதிய காட்சிகளுடன் பாடல் வெளியானது.  இதனையடுத்து, 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் கடந்த நவம்பர் 24-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.  ஆனால், சூப்பர் ஸ்டார் என்ற படத்தை இயக்க கவுதம் மேனன், ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் ரூ.2.40 கோடியை பெற்றுள்ளதாகவும் ஆனால், படத்தையும் முடிக்கவில்லை எனவும் பணத்தை திருப்பித் தராமல் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என அவருக்கு எதிராக நிறுவன பங்குதாரர் விஜய் ராகவேந்திரா மனு தாக்கல் செய்திருந்தார்.

வழக்கு விசாரணையில்,  பணத்தை திருப்பி தராமல் படம் வெளியிடக்கூடாது என உத்தரவிட்ட நிலையில்,  படம் இதுவரை வெளிவரவில்லை. இ ந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது, கவுதம் மேனன் தரப்பில் படத்தை பிப்ரவரி மாதம் வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும்,  அதுவரை மூன்று வாரங்களுக்கு வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வழக்கை மூன்று வாரங்களுக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags :
Actor vikramDhruva NatchathiramGowtham Vasudev MenonMadras High CourtNews7Tamilnews7TamilUpdatesRelease
Advertisement
Next Article