‘கேம் சேஞ்சர்’ படத்தின் 'Dhop' பாடல் வெளியானது!
ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தின்'Dhop' பாடல் வெளியானது.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கேம் சேஞ்சர்’. இதில் கியாரா அத்வானி நாயகியாக நடித்துள்ளார். அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீ காந்த், சமுத்திரக்கனி, நவீன் சந்திரா, ஜெயராம், சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு படத்தைத் தயாரித்துள்ளார்.
படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் "ஜரகண்டி" மற்றும் 'ரா மச்சா மச்சா' பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து வெளியான ‘லைரானா’ பாடலும் அனைவரையும் கவர்ந்தது. ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம் என்பதை நிரூபிக்கும் வகையில் அப்பாடல் அமையப்பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் 4வது பாடலான 'Dhop' என்ற பாடல் வெளியாகியுள்ளது.
படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், படம் ஜனவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே நாளில் ராம் சரணின் தந்தை சிரஞ்சீவி நடித்துள்ள ‘விஸ்வம்பரா’ திரைப்படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.