Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அழகன் தான் அவன் தான் அவன் தான்.. வைரலாகும் ‘தல’ தோனியின் புகைப்படங்கள்!

01:51 PM Jun 28, 2024 IST | Web Editor
Advertisement

தல தோனியின் புதிய ஹேர் ஸ்டைல் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. 

Advertisement

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அதிரடி பேட்டிங்க்கு புகழ்பெற்றவர்.  பல சாதனைகளுக்கும்,  பெருமைக்கும் சொந்தக்காரர். பேட்டிங்கு எப்படி புகழ் பெற்றவரோ அதுபோல வித்தியாசமான ஹேர் ஸ்டைலுக்கும் புகழ் பெற்றவர்.  ஏனெனில் அடிக்கடி தனது ஹேர்ஸ்டைலை மாற்றி ரசிகர்களின் மனதை கொள்ளையடிப்பதில் வல்லவர் தோனி.

இந்தியாவை காட்டிலும் தமிழ்நாட்டில் தோனிக்கு ரசிகர் பட்டாளம் அதிகம்.  காரணம் சென்னை சூப்பர் கிங்ஸ். சென்னை ஒரு உணர்வுப்பூர்வமானது எனவும் அவரே பல நேர்காணல்களிலும் தெரிவித்துள்ளார்.  அப்பட்டிப்பட்ட சென்னை ரசிகர்களை கவரும்  புகழ் பெற்ற ஹேர்ஸ்டைல்தான் நீண்ட தலைமுடி.  காரணம் சென்னை அணியின் சிங்கத்தை போல தோனியும் நீண்ட முடி வைத்திருப்பார்.  அவரின் இந்த நீண்ட தலைமுடி பாகிஸ்தான் அதிபர் முஷாரஃப் வரை கவர்ந்தது.

 

நினைக்கும் போதொல்லாம் ஒரு லுக்குக்கு மாறும் தோனி நீண்ட முடி,  சால்ட் அண்டு பெப்பர்,  வி ஷேப் ஹேர்ஸ்டைல் என பல கெட்டப்பில் இருப்பார்.  அந்த வகையில் இப்போது மீண்டும் ஒரு புதிய ஹேர் ஸ்டைலுக்கு தயாராகி விட்டார்.  அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.  இதனை அவரது சிகையலங்கார நிபுணர் ஆலிம் ஹக்கிம் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  இந்த பதிவு ஆயிரக்கணக்கான கருத்துகளையும், விருப்பங்களையும் பெற்று வருகிறது.

Tags :
cricketerfansMS DhoniNew Hairstyle
Advertisement
Next Article