Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

CSK வின் ஹாட்ரிக் வெற்றியை தடுத்து நிறுத்திய டெல்லி அணி - ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்த தோனியின் மாஸான ஃபினிஷிங்!

06:17 AM Apr 01, 2024 IST | Web Editor
Advertisement

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்று நடப்பு சீசனில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

Advertisement

ஐபிஎல் தொடரின் 13வது போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டி மைதானத்தில் தொடங்கியது. ருதுராஜ் கெய்க்வாட்  தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி இதில் களமிறங்கியது. சென்னை அணி இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வென்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. அதேநேரம், டெல்லி அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியுற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் இருந்தது.

இதனால் ஹாட்ரிக் வெற்றி பெற சென்னை அணியும், ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க டெல்லி அணியும் முனைப்பு காட்டின. ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 29 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் சென்னை அணி 19 முறையும், டெல்லி அணி 10 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 

இந்நிலையில் நேற்றைய போட்டிக்கான டாஸை வென்று டெல்லி கேப்பிடல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னர் மற்றும் பிரித்வி ஷா களமிறங்கினர். 10வது ஓவரை முஷ்தாபிஷூர் வீசிய முதல் பந்தில் வார்னர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை முஷ்தாபிஷூர் தவறவிட்டார். இருப்பினும் 3வது பந்தில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை பதிரனா கெட்டியாக பிடித்துக் கொண்டார். வார்னர் 35 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனையடுத்து ரிஷப் பண்ட் களமிறங்கினார். டெல்லி கேபிடல்ஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்தது.

11 ஆவது ஓவரை ஜடேஜா வீசினார். 4வது பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் பிரித்வி. அவர் 27 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனையடுத்து மிட்செல் மார்ஷ் களமிறங்கினார். 15வது ஓவரை பதிரனா வீச 4வது பந்தில் மார்ஷ் போல்டானார். மார்ஷ் 12 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய ஸ்டப்ஸ் 2வது பந்தில் போல்டாகி ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். டெல்லி கேபிடல்ஸ் அணி 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது.

19வது ஓவரை பதிரனா வீச 5வது பந்தில் ருதுராஜிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பண்ட் 32 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். 20வது ஓவரை முஷ்தாபிஷூர் வீசினார். இந்த ஓவரில் மொத்தம் 12 ரன்களுடன் டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்துள்ளது. இதனையடுத்து சென்னை அணிக்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 192ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மிட்செல் மற்றும் ரஹானே ஜோடி நிதானமாக விளையாடி அணியின் ரன் எண்ணிக்கையை நிதானமாக உயர்த்தியது. இதனைத் தொடர்ந்து மிட்செல் , ரஹானே ஆட்டமிழந்து வெளியேற அடுத்து வந்த ரிஜ்வியும் டக் அவுட் ஆனார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய சிவம் துபேயும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேற ஜடேஜாவுடன் அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக ஆடி பந்துகளை பவுண்ட்ரிகளுக்கும், சிக்ஸர்களுக்கும் பறக்க விட்டன. குறிப்பாக தோனி இந்த ஐபிஎல் சீசனில் முதல் முறையாக பேட்டிங்கில் நேற்று களமிறங்கினார்.

தோனியின் அதிரடி ஆட்டத்தால் மைதானம் முழுக்க “தோனி..தோனி..” என்கிற ஆரவாரத்துடன் விசாகப்பட்டிணம் மைதானம் சேப்பாக்கம் மைதானம் போல காட்சியளித்தது. இறுதியாக மகேந்திர சிங்கின் ஃபினிஷிங் ஷாட்டாக பந்தை சிக்ஸிற்கு பறக்க விட்டார். இதன்மூலம் 16 ரன்களுக்கு 37 ரன்கள் குவித்தார். இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை அணியால் இலக்கை அடையமுடியவில்லை. இதனைத் தொடர்ந்து சென்னை அணியின் ஹாட்ரிக் வெற்றியை டெல்லி அணி தடுத்து நிறுத்தியுள்ளது. இப்போட்டியின் ஆட்ட நாயகனாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வீரர் கலீல் அகமது தேர்வு செய்யப்பட்டார்.

Tags :
Cskcsk vs dcdcDC vs CSKdhoniIPLIPL 2024
Advertisement
Next Article