Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“தோனியின் 110M சிக்ஸர்தான் RCB வெற்றியை எளிதாக்கியது” - தினேஷ் கார்த்திக்!

01:16 PM May 19, 2024 IST | Web Editor
Advertisement

“தோனியின் 110M சிக்ஸர்தான் பெங்களூரு அணியின் வெற்றியை எளிதாக்கியது” என அந்த அணியின்  வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். 

Advertisement

இந்தியாவில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் 2024 கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து பல மைதானங்களில் போட்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் நேற்று நடந்த போட்டியே அனைவரும் மனதிலும் ஒரு மிகப்பெரிய மகிழச்சியையும், மிகப்பெரிய ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளது.

ஏனெனில் நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் 68வது லீக் போட்டியில் மோதின. ரசிகர்களுக்கு அனைவருக்கும் பெரும் போர்களமாக திகழ்ந்தது இந்த மைதானம். காரணம் மிகப்பெரிய ரசிகர் பட்டாத்தை கொண்ட இரு அணிகள், ப்ளே ஆஃப் சுற்றில் நான்காவதாக யார் நுழைவார் என்ற பெரும் முனைப்புடனும், போட்டியுடனும் களம் கண்டன.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்களை குவித்தது. பின்னர் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை குவித்தது. இதன்மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றிப் பெற்றது.

எம்.எஸ் தோனியின் கடைசி சீசன் என்பதால் ஒரு பக்கம் தோனி வெற்றி பெற வேண்டும் எனவும் , மறுபுறம் கோலி வெற்றி பெற வேண்டும் எனவும் உணர்ச்சி பொங்க மைதானம் காட்சியளித்தது. போட்டியின் இறுதியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இது அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. ஆனால் மறுபுறம் ‘தல’யின் அணி தோல்வியை தழுவியது. இது கொஞ்சம் வருத்தம்தான். ஆனால் இந்த முறை பெங்களூரு அணி இறுதிச்சுற்றில் வெற்றி பெறும் என அனைவரும் நம்புகின்றனர்.

இந்நிலையில் இந்த வெற்றி குறித்து பெங்களூரு அணியின் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக்  கூறியுள்ளதாவது;

“CSK அணிக்கு எதிரான போட்டியில் எங்களுக்கு சாதகமாக நிகழ்ந்த விஷயம் தோனி அடித்த அந்த 110M சிக்ஸர் தான். அந்த பந்து மைதானத்துக்கு வெளியே போனதால் தான் புதிய பந்து கிடைத்து பந்துவீச சுலபமாக இருந்தது. அது தான் நமது வெற்றியை எளிதாக்கியது” என தெரிவித்துள்ளார்.

Advertisement
Next Article