Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“என் மகனின் வாழ்க்கையை #Dhoni அழித்துவிட்டார்” - யுவராஜ் சிங் தந்தை ஆவேசம்!

02:02 PM Sep 02, 2024 IST | Web Editor
Advertisement

தன் மகன் யுவராஜ் சிங்கின் வாழ்க்கையை தோனி அழித்துவிட்டதாக யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங். தோனி தலைமையில் 2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 உலகக்கோப்பைகளை வெல்வதற்கு அவர் மிகவும் முக்கிய பங்காற்றினார். அத்தொடரில் தமக்கு புற்றுநோய் இருந்ததையும் தாண்டி யுவ்ராஜ் சிங் நாட்டுக்காக விளையாடியதை யாராலும் மறக்க முடியாது. அதன் பின் அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் புற்றுநோயையும் வென்று மீண்டும் நாட்டுக்காக விளையாடினார். யுவராஜ் சிங் பல இளம் வீரர்களுக்கு ரோல் மாடலாக திகழ்கிறார். இந்த நிலையில் தம்முடைய மகன் யுவராஜ் சிங் கேரியரை கேப்டன் எம்.எஸ். தோனி அழித்து விட்டதாக யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது,

"எம்.எஸ். தோனியை நான் மன்னிக்க மாட்டேன். அவர் தனது முகத்தை கண்ணாடியில் பார்க்க வேண்டும். பெரிய கிரிக்கெட்டரான அவர் எனது மகனுக்கு எதிராக செய்த விஷயங்கள் தற்போது வெளிவருகிறது. என்னுடைய வாழ்வில் அவரை எப்போதும் நான் மன்னிக்க மாட்டேன். என்னுடைய வாழ்வில் 2 விஷயங்களை செய்ததில்லை. ஒன்று எனக்கு தீங்கிழைத்தவர்களை எப்போதும் நான் மன்னித்ததில்லை.

இரண்டு அவர்கள் எனது குடும்ப உறுப்பினர்களாக இருந்தாலும் எனது வாழ்நாளில் எப்போதும் அவர்களை மறக்க மாட்டேன்.தோனி இன்னும் 5, 6 வருடங்கள் விளையாடியிருக்க வேண்டிய எனது மகனின் வாழ்க்கையை அழித்து விட்டார். சேவாக், கம்பீர் போன்றவர்கள் கூட மற்றொரு யுவராஜ் சிங் பிறக்க முடியாது என்று கூறியிருந்தனர். புற்றுநோயுடன் நாட்டுக்காக விளையாடி உலகக்கோப்பையை வென்று கொடுத்த அவருக்கு இந்தியா பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்."

இவ்வாறு யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

Tags :
CricketMS DhoniSportsYograj SinghYuvaraj Sngh
Advertisement
Next Article