மீண்டும் சென்னை அணிக்கு கேப்டனான தோனி - நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து ருதுராஜ் வெளியேறிய காரணம் என்ன?
தோனி தலைமையில் கோலோச்சி கொண்டிருந்த சென்னை அணி, இதுவரை ஐபிஎல் சீசனில் 2010, 2011, 2018, 2021,2023 ஆகிய ஆண்டுகளில் கோப்பைகளை வென்றுள்ளது. அதன் பின்பு 2024ல் இளம் வீரரான ருத்துராஜ் கெய்க்வாட்க்கு சென்னை அணியின் கேப்டனாக பொறுப்பேற்க வாய்ப்பளிக்கபட்டது. அவர் தலைமையிலான சென்னை அணி, கடந்த ஐபிஎல் சீசனில் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் திணறியது.
இதையடுத்து நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ருத்துராஜ் கெய்க்வாட் அணியை நன்கு வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி வெறும் 1 போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. இதன் மூலம் சென்னை அணி புள்ளி பட்டியலில் 9வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை அணிக்கு மீண்டும் கேப்டனாக தோனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது குறித்து அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் கூறியதாவது, “காயம் காரணமாக ருதுராஜ் கெய்க்வாட் முழு ஐபிஎல் போட்டிகளிலிருந்தும் வெளியேறியுள்ளார். மீதமுள்ள போட்டிகளுக்கு தோனி கேப்டனாக பொறுப்பேற்பார்”
இவ்வாறு சென்னை அணி பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் தெரிவித்துள்ளார்.