புதிதாக வாங்கிய டிவி முதல் நாளே பழுது - கடை முன் தர்ணாவில் ஈடுபட்ட குடும்பம்!
தாம்பரம் முடிச்சூர் சாலையில் வாங்கிய டிவி முதல் நாளே பழுதானதால்
குடும்பத்துடன் கடை முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாம்பரம் முடிச்சூர் சாலையில் ரிலையன்ஸ் டிஜிட்டல் என்ற மின்சாதன பொருட்கள் விற்பனை கடை உள்ளது. இதில் முடிச்சூரை சேர்ந்த வின்னரசி என்பவர் ரூ.43 ஆயிரம் மதிப்புள்ள 52 இன்ச் டிவியை கடந்த 10 நாட்களுக்கு முன்னர் வாங்கி உள்ளனர்.
டிவியை வாங்கிய பின்னர் சர்விஸ் நபர் டிவியை இன்ஸ்டால் செய்வதற்காக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது டிவியை முதல் நாள் இன்ஸ்டால் செய்யும்போது டி.வி. டிஸ்ப்ளேவில் பழுது ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் அவர் டிவியை மாற்றி தருமாறு பலமுறை அந்த ஷோரூமில் சென்று கேட்டுள்ளார். ஒவ்வொரு முறையும் மெயில் அனுப்பி உள்ளோம் என்றும் பதில் வரவில்லை என்றும் வாடிக்கையாளர் அலக்கழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் பொறுமையை இழந்த வாடிக்கையாளர் தனது குடும்பத்துடன் சென்று ரிலையன்ஸ் ஷோரூம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தாம்பரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமசர
பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் இது தொடர்பாக புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை
கூறினர். அதன் பின்னர் அங்கிருந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்று காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.