Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தனுஷ் இயக்கும் மூன்றாவது படம் - தலைப்பு வெளியீடு!

06:41 PM Dec 24, 2023 IST | Web Editor
Advertisement

நடிகர் தனுஷ் இயக்கும் மூன்றாவது படத்தின் பெயர் “நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கடந்த 2017-ம் ஆண்டு வெளியான 'ப.பாண்டி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனர் அவதாரம் எடுத்தார் நடிகர் தனுஷ். தொடர்ந்து தான் நடிக்கும் 50-வது படத்தையும் அவரே இயக்கி வருகிறார். இந்த நிலையில், தனுஷ் இயக்கும் மூன்றாவது படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக நடிகர் தனுஷ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'டிடி3' மற்றும் 24.12.23 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த புகைப்படத்தில் கடற்கரையில் காலியாக இருக்கும் பென்ச் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. படம் தொடர்பான வேறு எந்த தகவலும் இடம்பெறவில்லை.

அதன்படி, ஒரு வீடியோவை வெளியிட்டு படத்தின் தலைப்பை அறிவித்துள்ளார் நடிகர் தனுஷ். அந்த படத்தின் பெயர் “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” என வைக்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. தனுஷ் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

Tags :
Cinema updatesDD3DhanushdirectorGV PrakashNeekNews7Tamilnews7TamilUpdatesNilavuku enmel Ennadi Kobam
Advertisement
Next Article