புத்தாண்டை ஒட்டி தனுஷ் இயக்கி, நடிக்கும் 'இட்லி கடை' படத்தின் முதல் பார்வை போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது.
Advertisement
நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ராயன். இதனைத்தொடர்ந்து அவரது இயக்கத்தில் உருவாகி வரும் 4வது திரைப்படம் ‘இட்லி கடை’. தனுஷே இயக்கி, நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இத்திரைப்படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதில், நித்யா மேனன், அருண் விஜய், ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படம் வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது. கிராமத்து இளைஞரின் பார்வையில் தனுஷ் இருக்கும் முதல் பார்வை போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.