Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தனுஷின் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட தடை!

04:44 PM Jan 09, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

தனுஷ், பிரியங்கா மோகன் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12-ம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதை தடுக்க உத்தரவிடக் கோரி சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, சத்யஜோதி பிலிம்ஸ் பட நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியம் ஆஜராகி படத்தை சட்டவிரோதமாக வெளியிடுவதால், தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், திரையங்கத்தினர் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்படுவார்கள் என்பதால், தகுந்த தடை உத்தரவை பிறப்பிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கேப்டன் மில்லர் படத்தை 1166 இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிட தடை விதித்து உத்தரவிட்டதுடன், தகுந்த நடவடிக்கைகளை தனியார் மற்றும் அரசு இணைய தள சேவை வழங்கும் நிறுவனங்கள் மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்.

Tags :
Captain MillerCinema updatesDhanushHighCourtillegal releaseMHCNews7Tamilnews7TamilUpdatespriyanka mohan
Advertisement
Next Article