Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு - அக்.7 ல் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

05:13 PM Apr 15, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்  விவாகரத்து வழக்கில், அக்டோபர் 7 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Advertisement

தமிழில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ்.  தமிழில்  மட்டுமின்றி ஹாலிவுட் படங்களிலும் பட்டையை கிளப்பி வருபவர்.  முன்னணி நடிகரான தனுஷ்,  நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் இருவரும் விவாகரத்து செய்து கொள்வதாக அறிவித்தனர்.  இவ்விவகாரம் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இதனையடுத்து கருத்து வேறுபாட்டால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனித் தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.  இந்நிலையில் கடந்த வாரம் பரஸ்பரம் விவாகரத்துக் கோரி இருவர் தரப்பிலும் சென்னை குடும்ப நல நீதின்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணையை அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி தள்ளி வைத்து,  இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்ற நீதிபதி சுபா தேவி உத்தரவிட்டுள்ளார்.

Tags :
actorAishwarya rajinikanthDhanushdirectorDivorce
Advertisement
Next Article