Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மத்திய பட்ஜெட்டில் 'தன் தன்யா கிருஷி' திட்டம் அறிமுகம்!

குறைந்த உற்பத்தி திறன் கொண்ட 100 மாவட்டங்களை உயர்த்தும் தன் தன்யா கிருஷி யோஜனா என்ற புதிய திட்டம் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
01:22 PM Feb 01, 2025 IST | Web Editor
Advertisement

2025-26-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 8வது முறையாக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதாவது,

Advertisement

"உலக அளவில் வேகமாக வரும் பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. வளர்ந்த இந்தியா என்ற நிலையை அடைய தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு மேற்கொண்ட கட்டமைப்பு சீர்திருத்தங்கள் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகள் நமக்கான வரப்பிரசாதமாக மாறும்.

இதையும் படியுங்கள் : செல்போன், மின் வாகனங்கள் விலை குறைகிறது – பட்ஜெட்டில் வெளியான இனிப்பான அறிவிப்பு!

'தன் தன்யா கிருஷி' என்கிற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த உற்பத்தி திறன் கொண்ட 100 மாவட்டங்கள் இந்த திட்டத்தின் முக்கிய இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நமது பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியா மீதான நம்பகத்தன்மை உலக அளவில் உயர்ந்துள்ளது. எல்லா பகுதிகளிலும் சமச்சீரான அளவில் வளர்ச்சி உள்ளது"

இவ்வாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Tags :
மத்திய பட்ஜெட்மத்திய பட்ஜெட் 2025Budget 2025Budget2025Finance Ministernews7 tamilNews7 Tamil UpdatesNirmala sitharamanparliamentunion budgetUnion Budget 2025
Advertisement
Next Article