Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

’உடுமலைப்பேட்டை காவலர் சண்முகவேல் உடலுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் அஞ்சலி!’

உடுமலைப்பேட்டையில் கொலை செய்யப்பட்ட காவலர் எஸ்.ஐ. சண்முகவேல் உடலுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
07:33 PM Aug 06, 2025 IST | Web Editor
உடுமலைப்பேட்டையில் கொலை செய்யப்பட்ட காவலர் எஸ்.ஐ. சண்முகவேல் உடலுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
Advertisement

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே குடிமங்கலம் போலீஸ் சிறப்பு எஸ்.ஐ.ஆக பணியாற்றி வந்தவர் சண்முகவேல். இதனிடையே, மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரன் தோட்டத்தில் பணியற்றி வந்த தந்தை, மகன் இருவருக்கும் நேற்று பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

Advertisement

இது குறித்து தகவல் அறிந்து எஸ்.ஐ. சண்முகவேல் விசாரிக்க சென்றுள்ளார். அப்போது மதுபோதையில் இருந்த தந்தை, மகன் இருவரும் சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேலை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சண்முகவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றாவளிகள் இருவரையும் 5 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சித தலைவர்களும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வலியுறுத்தியும் வருகின்றனர். மேலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்த காவலர் சண்முகவேலுக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும் 1 கோடி ரூபாய் நிவாரணத்தொகையும் அறிவித்தார்.

இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேல் உடலுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட அவரது மனைவி உமாமகேஸ்வரியிடம் தமிழக அரசு அறிவித்த 1 கோடிக்கான காசோலையை வழங்கினார்.

இறுதியாக, சண்முகவேல் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யபட்டது

Tags :
latestNewsssisshanmugaveltgpTNnewsTNPoliceudumalaipettai
Advertisement
Next Article