திருச்செந்தூர் முருகன் கோயிலில் 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விடுமுறை தினத்தையொட்டி 5 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து வேல் குத்தியும், காவடி எடுத்தும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவது வழக்கம். அந்த வகையில், கடந்த சில நாட்களாக ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக காவடி எடுத்தும், வேல் குத்தியும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர்.
தரிசனத்தில் சுமார் 3 மணி நேரமும் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி
தரிசனம் செய்து வருகின்றனர். ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் கோயில் வளாகம்
திருவிழா போல் காட்சி அளித்தது.