Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

புரட்டாசி மாத பெளர்ணமி : #sathuragiri -ல் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்!

08:36 AM Sep 17, 2024 IST | Web Editor
Advertisement

புரட்டாசி மாத பெளர்ணமியை  முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே குவிந்து சாமி தரிசனம் செய்தனர். 

Advertisement

அமாவாசை தினங்களில் ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை ஆகியவை 3 அமாவாசைகளை முக்கிய அமாவாசை தினங்களாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில், புரட்டாசி  மாத பெளர்ணமி தினமான இன்று (செப்- 17ம் தேதி) முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக ஏராளமானோர் நீர்நிலைகளில் குவிந்து வருகின்றனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் இன்று புரட்டாசி  மாத பெளர்ணமியை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலை மலையேறி சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், மிலாடி நபி விடுமுறை தினம் என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

இதையும் படியுங்கள் : “ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம் திமுக” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

குறிப்பாக, காலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், பக்தர்கள் கோயில் மலைப்பகுதியில் இரவில் தங்குவதற்கு அனுமதி கிடையாது என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பக்தர்களின் வாகனங்கள் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் தாணிப்பாறை விளக்கு பகுதியில் நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் அங்கிருந்து நடந்து வரும் சூழ்நிலை ஏற்பட்டது.

Tags :
devoteesnews7TamilUpdatespuratasi monthSamidharshansathuragiriSundara Mahalingam temple
Advertisement
Next Article