விடுமுறை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள் - 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்!
திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயில் பிரசித்தி பெற்ற கோயிலாகும். மேலும் இக்கோயில் சூரனை வதம் செய்த இடமாகவும், குரு ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த நிலையில், விடுமுறை தினத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகை தந்தனர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடலில் குளித்து விளையாடி விடுமுறையை கொண்டாடினர். வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் பக்தர்கள் கடும் அவதிகுள்ளாகினர். காற்றோட்டம் இல்லாததால் விசிறியை கைகளில் வைத்து வீசியபடி குழந்தைகளுடன் தரிசனத்திற்காக காத்திருந்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.