Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

21-ஆம் தேதி முதல் சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!

07:20 PM Feb 19, 2024 IST | Web Editor
Advertisement

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மாசி மாத பிரதோஷம், பவுர்ணமி வழிபாட்டை முன்னிட்டு பிப்.21 முதல் 24 முடிய 4 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது. 

Advertisement

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். இந்த கோயிலானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி என்பது வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி, மாசி மாத பிரதோஷம், பௌா்ணமி வழிபாட்டுக்காக பிப்ரவரி 21-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை 4 நாள்கள் பக்தா்கள் மலையேறி, சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. காலை 6 முதல் பகல் 12 மணி வரை மட்டுமே மலையேற அனுமதி வழங்கப்படும் எனவும், அனுமதிக்கப்பட்ட நாள்களில் மழை பெய்தால் சதுரகிரி செல்வதற்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ள சதுரகிரி மலையில் கடந்த 2018-ம் ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பிறகு கோயிலில் தரிசனம் செய்ய பக்தா்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட பிறகு கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்பட்டது.

Advertisement
Next Article