Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டெல்லி காங்கிரஸ் தலைவராக தேவேந்தர் யாதவ் நியமனம்!

04:09 PM Apr 30, 2024 IST | Web Editor
Advertisement

டெல்லி காங்கிரஸ் தலைவராக தேவேந்தர் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  

Advertisement

இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 2 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில், இன்னும் 5 கட்ட தேர்தல்கள் மீதம் உள்ளன .  அதன்படி மே.7 ஆம் தேதி 3 ஆம் கட்ட தேர்தல்  நடைபெற உள்ளது.  அதேபோல டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு மே 25 அன்று நடைபெற உள்ளது.

இதனிடையே டெல்லி காங்கிரஸ் தலைவராக இருந்த அர்வீந்தர் சிங் லவ்லி இரண்டு நாட்களுக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.  மேலும்   அவர் தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பி வைத்தார்.

 

அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது..

” காங்கிரஸ் கட்சியின் மீது பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட மற்றும் தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்த ஆம் ஆத்மி கட்சியுடன் தற்போது காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. மறைந்த ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் செய்யப்பட்ட வளர்ச்சிப் பணிகளுடன் ஒப்பிடுகையில், ஆம் ஆத்மி ஆட்சியின் கீழ், டெல்லியில் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பொது உள்கட்டமைப்புகளின் நிலை மிகவும் மோசமாகிவிட்டது. இந்த  உண்மையை வடகிழக்கு டெல்லி வேட்பாளர் அறிந்திருக்கவில்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணியில் இருப்பதில் துளியும் விருப்பம் இல்லை. இதனால் இனிமேலும் கட்சியின் தலைவராக தொடர்வது எந்த நியாயமான காரணமும் இல்லை.” என அரவிந்த் சிங் லவ்லி தெரிவித்துள்ளார்.  இந்த நிலையில், டெல்லி காங்கிரஸ் தலைவராக தேவேந்தர் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் ஏற்கெனவே பஞ்சாப் மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக இருந்து வந்த நிலையில் அந்த பதவியிலும் தொடர்வார் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.

Tags :
AAPAravind Sing LovelyDCCDevender Yadav
Advertisement
Next Article